வால்கேர் புட்டி
உங்கள் சுவர்களுக்கு வண்ணத்தின் உண்மையான தொனி வேண்டுமா? பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியை வாங்குங்கள் - இந்தியாவின் உண்மையான மற்றும் வெண்மையான புட்டி!
வால்கேர் புட்டி
உங்கள் சுவர்களுக்கு வண்ணத்தின் உண்மையான தொனி வேண்டுமா? பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியை வாங்குங்கள் - இந்தியாவின் உண்மையான மற்றும் வெண்மையான புட்டி!
வால்கேர் புட்டி கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் வால்கேர் புட்டி இந்தியாவின் உண்மையான மற்றும் வெண்மையான புட்டி என்று அறியப்படுகிறது. இது ஒரு வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான, நீர்-எதிர்ப்பு, வெள்ளை சுவர் புட்டி ஆகும், இது கட்டிட மேற்பரப்புகளுடன் வலுவான பிணைப்பு, ஸ்மூத் ஃபினிஷ், விரிவான கவரேஜ், சிறந்த ஒளிவிலகல் குறியீடு மற்றும் பெயிண்ட்டுக்கு உகந்ததாக இருப்பது ஆகியவற்றை உறுதி செய்கிறது. அதன் தனித்துவமான சூத்திரத்தில் கூடுதல் ஹெச்.பி பாலிமர்கள் உள்ளன, அவை ஈரப்பதத்தை விலக்கி வைக்கின்றன, மேலும் செதிலாதலையும் தவிர்க்கின்றன. எனவே, உங்கள் கனவு இல்லத்திற்கான அழகியல் உட்புறங்களை நீங்கள் பல ஆண்டுகளுக்காக உறுதி செய்கிறீர்கள்.
வகைகள்
Rose Putty
Wallcare Putty Regular
Wallcare Putty Regular
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்
சுற்றுப்புறச்சூழலுக்கு ஏற்றது
துகள் துகளாகாது
மென்மையான பினிஷ்
நீர் புகாதது
அம்சங்கள்
 • மேம்பட்ட வெண்மை
 • மேம்படுத்தப்பட்ட ஒட்டும் தன்மை மற்றும் ஆயுள்
 • பயன்பாட்டிற்குப் பிறகு நீராற்றல் தேவையில்லை
 • வண்ணத்தின் உண்மையான தொனி(டோன்)
 • கூடுதல் ஹெச்.பி பாலிமர்கள் காரணமாக நீர் எதிர்ப்பு
 • சான்றளிக்கப்பட்ட பசுமை தயாரிப்பு
 • பூஜ்யம் வி.ஓ.சி-கள்
 • கார்பனேற்ற எதிர்ப்பு பண்பு
பயன்கள்:
 • செதிலாவதைத் தடுக்கிறது
 • ஆல்கா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது
 • பெயிண்ட் பூசப்பட்ட மேற்பரப்பில் ஈரப்பதத்தை எதிர்க்கிறது
 • பெயிண்ட்களின் நுகர்வைக் குறைக்கிறது
 • அடித்தளத்துடன் வலுவாகப் பிணைகிறது
 • வண்ணத்தின் உண்மையான தொனியை அளிக்கிறது
 • அதன் மீது எந்தவொரு பெயிண்ட் அல்லது டிஸ்டெம்பர் பயன்பாட்டையும் ஏற்றுக்கொள்கிறது
 • மேற்பரப்புகளுக்கு மென்மையான மற்றும் பளபளப்பான ஃபினிஷை அளிக்கிறது
பயன்பாடுகள்
 • உட்புறச் சுவர்கள்
 • வெளிப்புற சுவர்கள்
 • சுவர் பிரிவுகள்
 • மீண்டும் பெயிண்ட் செய்யும் சுவர்கள்
தொழில்நுட்பத் தரவரைவுகள்
பண்புகள் யூனிட் தரவரைவுகள் சோதனை முறை குறிப்புக்காக HDB சிங்கப்பூரின் படி சோதனை முறை
Tensile Adhesion Strength @ 28 days N/m2 > 1.0 EN 1348 > 0.8 EN 1348
Compressive Strength @ 28 days N/m2 3.5-7.5 EN 1015-11 7.12 EN 1015-11
Setting Time *
Initial
Final
min >= 100
<=500
EN 196 < 360
<500
EN 196
Water Absorption@ 28 days for 24 hrs ml <= 0.8 Karsten Tube --- Karsten Tube
Water Absorption Coefficient kg/m2 .h1/2 <= 1.0 DIN 52617 --- DIN 52617
Water Retentivity % >= 98 DIN 18555-7 >= 95 DIN 18555-7
* Depend upon ambient temperature & atmospheric condition.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பிர்லா ஒயிட் வால்கேர் புட்டி என்பது கூடுதல் ஹெச்.பி பாலிமர்களைக் கொண்ட வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான நீர்-எதிர்ப்பு அடிப்பூச்சு ஆகும், இது உங்கள் சுவர் பெயிண்ட்டுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது.
பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியில் பிர்லா ஒயிட் சிமெண்ட், கூடுதல் நீர் எதிர்ப்புப் பாலிமர்கள் மற்றும் சில சிறப்பு இரசாயனங்கள் மற்றும் தாது நிரப்பிகள் உள்ளன, அவை உங்கள் சுவர்களுக்கு ஸ்மூத் ஃபினிஷைத் தருகின்றன.
பிர்லா ஒயிட் வால் கேர் புட்டி இரண்டு வகைகளில் கிடைக்கிறது: வால் கேர் புட்டி மற்றும் வால் லெவலிங் புட்டி எம்.எஃப் (மேட் ஃபினிஷ்). முக்கிய அலைவுகளை (ஏதேனும் இருந்தால்) மறைக்க மேற்பரப்பில் முதல் பூச்சாக எம்.எஃப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் வால் கேர் புட்டியை 0.0015 மீட்டர் தடிமன் வரை பூசுவதன் மூலம் இறுதி ஃபினிஷ் செய்யப்படுகிறது.
பூச்சுகளின் எண்ணிக்கை மேற்பரப்பின் தரத்தைப் பொறுத்தது. வழக்கமாக, பிர்லா ஒயிட் வால் கேர் புட்டி (எம்.எஃப்) சுவர் சமன்படுத்தும் புட்டியின் 1-2 பூச்சுகள் பெரிய அலைவை மறைக்க வேண்டும், அதன் பின்னர் வால் கேர் புட்டியின் 1-2 பூச்சுகள் ஃபினிஷிங் பூச்சாக இருக்கும்.
தூசி, கிரீஸ், எண்ணெய், கறை அல்லது எந்தத் தளர்வான பொருட்களும் இல்லாத எந்த வகையான பிளாஸ்டர்/ ஆர்.சி.சி/ கான்கிரீட் மேற்பரப்பில் பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியைப் பயன்படுத்தலாம்.
ஆமாம், பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியைப் பயன்படுத்துவதற்கு முன்பு சுவர் மேற்பரப்பு முன்கூட்டி ஈரப்படுத்தப்படுவது சிறந்தது. இது அதிகப் பிணைப்பு வலிமை, எளிதான வேலைத்திறன் மற்றும் அதிகக் கவரேஜ் ஆகியவற்றை உறுதி செய்கிறது.
பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியைச் சமன் செய்யும் பொருளாகப் பயன்படுத்தக்கூடாது. சுவர் அலைவு சிக்கல்களுக்கு, இந்தத் தயாரிப்பின் மற்றொரு வடிவத்தை நீங்கள் பயன்படுத்தலாம், அதாவது பிர்லா ஒயிட் வால்கேர் புட்டி (எம்.எஃப்). பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியுடன் இதைப் பின்தொடர்வது சிறந்தது.
பயன்பாட்டிற்குப் பின் பிர்லா ஒயிட் வால் கேர் புட்டிக்கு எந்த நீராற்றலும் தேவையில்லை.
கவரேஜ் பகுதி மேற்பரப்பின் தரத்தைப் பொறுத்தது, இருப்பினும், ஒரு பொதுமைப்படுத்தலாக, பிர்லா ஒயிட் வால் கேர் புட்டியின் கவரேஜ் பகுதி 1.86-2.04 சதுர மீட்டர்/கிலோ ஆகும்.
பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (பி.ஓ.பி)-ஐ விடப் பிர்லா ஒயிட் வால்கேர் புட்டி சிறந்த விருப்பத்தேர்வாகும், ஏனெனில் இது நீர் எதிர்ப்பு உடையது மற்றும் ப்ரைமர் பூச்சு தேவையில்லை. பி.ஓ.பி, மறுபுறம், மிகவும் நீர் உறிஞ்சும் தண்மை உடையது மற்றும் ஈரப்பதத்தை உள்வாங்கக்கூடியது, மேலும் அதன் மீது ஒரு பூச்சு ப்ரைமர் பூசப்பட வேண்டும்.
பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியை உலர்வான இடத்தில் சேமிக்க வேண்டும்.
பிர்லா ஒயிட் வால்கேர் புட்டிக்குக் காலாவதி தேதி இல்லை, ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் இதைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.
வழக்கமான சுவர் புட்டியுடன் ஒப்பிடும்போது பிர்லா ஒயிட் வால்கேர் புட்டி ஒரு சிறந்த தயாரிப்பு. இது விலை வேறுபாட்டிற்கு வழிவகுக்கும். உங்கள் கட்டுமானத் தேவைகளை வால்கேர் புட்டியுடன் பூர்த்தி செய்வதற்கான செலவைக் கண்டறிய எங்கள் காஸ்ட் கால்குலேட்டரை முயற்சிக்கவும்.
ஆம், பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியானது கிரீன்ப்ரோ தரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது, மேலும் கிரீன்ப்ரோ சான்றிதழ் பெறவும் தகுதி பெறுகிறது.
தற்போது ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான விருப்பத் தேர்வு இல்லை. மேலும், நாங்கள் இப்போது எந்தவொரு தயாரிப்புகளையும் நேரடியாக வழங்குவதில்லை. அவை எங்கள் ஸ்டாக்கிஸ்ட் நெட்வொர்க் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியின் பயன்பாட்டிற்குப் பயிற்சி பெற்ற ஒப்பந்தக்காரர் தேவை. எனவே, எங்கள் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்/ஸ்டாக்கிஸ்டிடமிருந்து தயாரிப்பை வாங்கப் பரிந்துரைக்கிறோம், அவர்கள் ஒரு பயிற்சி பெற்ற திறமையான ஒப்பந்தக்காரருடன் தொடர்பு கொள்ளவும் உதவுவார்கள்.
பிர்லா ஒயிட், சி.ஏ.எஸ்.சி ஆதரவுக்காக (வாடிக்கையாளர் பயன்பாட்டு ஆதரவு செல்) இந்தியா முழுவதும் பயிற்சி பெற்ற மற்றும் ஈடுபாடான கட்டிடப் பொறியாளர்கள் குழுவைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டிடப் பொறியாளர்கள் ஆன்-சைட் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆன்-சைட் சாம்ப்லிங்கை வழங்குகிறார்கள். மேற்பரப்பு ஃபினிஷ் செய்யும் அப்ளிகேட்டர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் நவீனக் கருவிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள், அவை நிபுணத்துவத்தை உருவாக்க மற்றும் நிபுணத்துவம் மிகுந்த பிர்லா ஒயிட் அப்ளிகேட்டர்களாக மாற அவர்களுக்கு உதவுகின்றன.
கிடைக்கும் பேக் அளவுகள்
நற்சான்றிதழ்கள்
காணொளிகள்