வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி

சப்ஸே சஃபெத் தீவர் அவுர் ரோக் பானி கா ஹர் வார்

Loading

வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி

சப்ஸே சஃபெத் தீவர் அவுர் ரோக் பானி கா ஹர் வார்
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி என்பது 2x நீர் எதிர்ப்பு திறன் மற்றும் ஆக்டிவ் ஜெர்மன் சிலிக்கான் பாலிமர்களைக் கொண்ட வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான புட்டி ஆகும், மேற்பூச்சு பெயிண்ட் அல்லது டிஸ்டெம்பர் பூசப்படுவதற்கு முன்னர்ப் பிளஸ்டெர்/கான்கிரீட் மற்றும் காரைச் சுவர் பரப்பின் மீது ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கி, உங்கள் சுவர்களைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கிறது.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
2x Water Resistance
Active German Silicone Polymer
More Whiteness
சிறப்பம்சங்கள்
 • ஆக்டிவ் ஜெர்மன் சிலிக்கான் பாலிமர்களைக் கொண்டுள்ளது
 • சிறந்த வெண்மை
 • சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது
 • நீடித்து உழைக்கக்கூடிய தன்மை மற்றும் மெல்லிய விரிசலுக்கான எதிர்ப்பு திறன்
 • நீர் ஊற்றி உலர விட வேண்டிய தேவையில்லை
நன்மைகள்:
 • 2X நீர் எதிர்ப்பு திறன்
 • மேற்பரப்பிற்கு சீரான மற்றும் பளபளப்பான ஃபினிஷை வழங்குகிறது
 • மேற்பூச்சின் உண்மையான நிறத்திண்மையைப் வெளிப்படுத்துகிறது
 • சிறப்பான வேலைத்திறன்
உபயோகம்
 • உட்புற சுவர்கள்
 • வெளிப்புற சுவர்கள்

The technology used to manufacture this product is ‘Patent Pending’.

டெக் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ்
Sr.No டெக்னிக்கல் அளவுகள் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ் சோதனை முறை
1 *கவரேஜ் (சதுரமீட்டர் / கிலோ)[நல்லசீரானபரப்பில்] 1.48645 - 1.76516 வீடுகளில்
2 கலவைகாத்திருப்பு (மணிநேரங்கள்) 3.0 - 3.5 வீடுகளில்
3 ஒட்டும்தன்மை @28 நாட்கள் (N/m2) ≥ 1.0 EN 1348
4 நீர்உறிஞ்சும்திறன் (மிலி), 30 நிமிடங்கள் @28 நாட்கள் ≤ 0.3 கார்ஸ்டன்குழாய்
5 இறுக்கவலிமை @28 நாட்கள் (N/m2) 3.5 - 7.5 EN 1015-11
6 பருமஅடர்த்தி (g/cm3) 0.90 - 1.10 வீடுகளில்
*இந்தமதிப்புகள்அனைத்தும்சீரானபரப்பிற்குமட்டுமே; இதுதளத்தின்அமைப்பினைபொறுத்துமாறுபடலாம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
 • பூசப்படும் போது, அடிப்பரப்பு முன்கூட்டி ஈரப்படுத்தப்பட்ட/ஈரமான நிலையில் இருப்பதை உறுதி செய்யவும்.
 • புட்டியின் கலவை மிகவும் முக்கியமானதாகும், எனவே விரும்பிய முடிவுகளைப் பெறுவதற்குத் தேவையான வரிசையில் கை அல்லது இயந்திரக் கலக்கியைப் பயன்படுத்திச் சரியாக மற்றும் நன்றாகக் கலக்கவும். ஒரு சீரான பேஸ்ட் உருவாகும் வரை கலக்குவதைத் தொடர வேண்டும்.
 • மூன்றரை மணி நேரத்திற்குள் பயன்படுத்தும் அளவுக்குத் தேவையான கலவை மட்டுமே தயார் செய்யப்பட வேண்டும்.
 • புட்டியை விழுங்கினால் அது உடலுக்கு மிகவும் தீங்கானதாகும், எனவே ஒருவேளை அது உட்கொள்ளப்பட்டால் உடனடியாக மருத்துவக் கவனிப்பைப் பெறவும்.
 • பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டியைப் பயன்படுத்தும் போது தோலில் எரிச்சல் தோன்றினால் அல்லது தொடர்ந்தால், அதை உடனடியாக அதிகமான தண்ணீரில் கழுவிவிட்டு, உடனடி மருத்துவக் கவனிப்பைப் பெறவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி என்பது 2x நீர் எதிர்ப்பு திறன் மற்றும் ஆக்டிவ் ஜெர்மன் சிலிக்கான் பாலிமர்களைக் கொண்ட வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான புட்டி ஆகும், மேற்பூச்சு பெயிண்ட் அல்லது டிஸ்டெம்பர் பூசப்படுவதற்கு முன்னர்ப் பிளஸ்டெர்/கான்கிரீட் மற்றும் காரைச் சுவர் பரப்பின் மீது ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கி, உங்கள் சுவர்களைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கிறது.
ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி வெள்ளை சிமெண்ட், நீர் எதிர்ப்பு RD பாலிமர், ஜெர்மன் ஆக்டிவ் சிலிக்கான் பாலிமர் மற்றும் தரப்படுத்தப்பட்ட நிரப்பிகள் ஆகியவற்றால் ஆனது.
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளது
 • ஆக்டிவ் ஜெர்மன் சிலிக்கான் பாலிமர்களைக் கொண்டுள்ளது
 • சிறந்த வெண்மை
 • சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காதது
 • நீடித்து உழைக்கக்கூடிய தன்மை மற்றும் மெல்லிய விரிசலுக்கான எதிர்ப்பு திறன்
 • நீர் ஊற்றி உலர விட வேண்டிய தேவையில்லை
ஆம், புட்டி பூசப்படுவதற்கு முன்பு சுவர்/மேற்பரப்பு ஈரப்படுத்தப்பட வேண்டும்.
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டியின் கவரேஜ் (சதுர மீட்டர்) ஒரு கிலோவிற்கு 1.49 – 1.76 சதுர மீட்டர் ஆகும்.
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி 30 கிலோ பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டியின் பூசுதல் செயல்முறைகள் பின்வருமாறு:
பூசுவதற்கு முன்
 • எமரி தாள், புட்டி பிளேடு அல்லது வயர் பிரஷைப் பயன்படுத்தி அழுக்கு, தூசி மற்றும் எண்ணெய் முதலியன போன்ற தளர்வாக ஒட்டிக்கொண்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் மேற்பரப்பிலிருந்து அகற்றவும்.
 • பிரஷ், நெளிகுழாய் அல்லது குவளை/குடுவையைப் பயன்படுத்தி மேற்பரப்பை முன்கூட்டி ஈரப்படுத்துங்கள். பூசும் போது மேற்பரப்பை ஈரப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
“வாட்டர்ப்ரூஃப் புட்டியின்” கலவை
கலப்பு விகிதம்: பேஸ்ட்டைத் தயாரிப்பதற்கு 1 கிலோ வாட்டர்ப்ரூஃப் புட்டியை 36-38% சுத்தமான தண்ணீரில் மெதுவாகச் சேர்க்கவும் (1 கிலோ புட்டி+360-380 மில்லி லிட்டர் தண்ணீர்). கிரீம் போன்ற பதத்தைப் பெறுவதற்கு, இயந்திரக் கலக்கியைப் பயன்படுத்திக் கலக்க வேண்டும் (3-5 நிமிடங்கள்). சிறப்பான முடிவைப் பெறுவதற்கு, நன்றாகக் கலக்கிய பின்னர் அந்தப் பேஸ்ட்டை 5 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். தயாரிக்கப்பட்ட பேஸ்ட் 3:00 -இல் இருந்து 3:30 மணி நேரத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.
அடிப்பரப்பு/பரப்பின் மீது பூசப்படும் முறைகள்
 • நன்றாகக் கலக்கிய பின்னர்ப் பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டியின் முதல் பூச்சை முன்கூட்டியே ஈரமாக்கப்பட்ட சுவர்/அடிப்பரப்பின் மீது புட்டி பிளேடின் உதவியுடன் பூசவும். பூசப்படும் போது அடிப்பரப்பின் வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேடுக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
 • புட்டியின் முதல் பூச்சு உலர்ந்த பின்னர்த் தளர்வான பொருட்களை நீக்குவதற்காக அதன் மேற்பரப்பை ஒரு ஈரமான ஸ்பாஞ்சைப் பயன்படுத்தி மெதுவாகத் தேய்க்கவும் அல்லது ஒரு புட்டி பிளேடைப் பயன்படுத்தி மிகவும் மெதுவாகத் தேய்க்கவும்.
 • மேற்பரப்பைக் குறைந்தது 3-4 மணி நேரம் உலர அனுமதிக்கவும், பின்னர்ப் பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டியின் இரண்டாவது பூச்சைப் பூசவும். மேற்பரப்பை முழுமையாக உலர விடவும்.
 • மேற்பூச்சு பெயிண்ட்/டிஸ்டெம்பரைப் பூசுவதற்கு முன்பு மேற்பரப்பை 24 மணி நேரம் உலர விடவும் (காலநிலைகளைப் பொறுத்து மேற்பரப்பு முழுமையாக உலர்ந்திருப்பதை உறுதி செய்யவும்).
 • இறுதி பூச்சின் புட்டி மேற்பரப்பைக் கடினமான எமரி தாளைப் பயன்படுத்தி வலுவாகத் தேய்க்கப் பரிந்துரைக்கப்படவில்லை. இது பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டியின் நீர் எதிர்ப்பு பண்புகளை உடைத்துவிடும். எந்தவொரு பெயிண்ட்/டிஸ்டெம்பரைப் பூசுவதற்கு முன்பு சீரற்ற தன்மையை/பேட்ச்சுகளை அகற்ற வேண்டிய தேவை இருந்தால், பளபளப்பான வெள்ளை மேற்பரப்பைப் பெறுவதற்கு 500 என்ற எண்ணில் குறையாத மிகச் சிறந்த நீர்த்தடுப்பு எமரி தாளைப் பயன்படுத்தி மேற்பரப்பை மெதுவாகச் சமன் செய்யுங்கள்.
 • இரண்டு பூச்சுகளின் மொத்தத் தடிமன் அதிகபட்சமாக 1.5 மிமீ என்ற வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
இந்தத் தயாரிப்பை முக்கியமாக உட்புறப் பரப்புகளில் பூசலாம், அத்துடன் சிமெண்ட் அடிப்படையிலான பிளாஸ்டர்/கான்கிரீட்/காரைச் சுவர்கள் போன்ற வெளிப்புறப் பரப்புகள், மழை, ஈரம் மற்றும் ஈரப்பதத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி அதிக நீர் எதிர்ப்பு திறன் கொண்டது. இது எந்தவொரு சாதாரணச் சிமெண்ட் அடிப்படையிலான புட்டியை விடவும் இரண்டு மடங்கு அதிகமான நீர் எதிர்ப்பு திறனைக் கொண்டது, மேலும் சுவரில் நீர்க்கசிவிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.
பெயிண்ட் செய்வதற்கு முன் மேற்பரப்பில் பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டியின் 2 பூச்சுகள் பூசப்பட வேண்டும்.
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி ஒரு வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான நீர்த்தடுப்புப் புட்டி என்பதால், பூசியதற்குப் பின் இதற்கு நீர் ஊற்றி உலர விட வேண்டிய தேவையில்லை.
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டியின் சிறந்த கவரேஜ் ஒரு கிலோவிற்கு 1.48645 – 1.76516 சதுர மீட்டர் ஆகும்.
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டியைக் குழந்தைகளுக்கு எட்டாதவாறு குளிர்வான மற்றும் உலர்வான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
ஆம், பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி 6 மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகும்.
ஆம், பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி கிரீன்ப்ரோ தரத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்து கிரீன்ப்ரோ சான்றிதழைப் பெறத் தகுதியானதாய் உள்ளது.
ஆம், கார்வி ஆராய்ச்சி முடிவுகளில் கூறப்பட்டுள்ளபடி பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி சிறந்த நீர்த்தடுப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
பிர்லா ஒயிட் வால்சீல் வாட்டர்ப்ரூஃப் புட்டி ஆக்டிவ் ஜெர்மன் சிலிக்கான் பாலிமர்களைக் கொண்டுள்ளது, இது சந்தையில் கிடைக்கும் மற்ற சாதாரண நீர்த்தடுப்பு புட்டியுடன் ஒப்பிடுகையில் இதை அதிக நீர் எதிர்ப்பு திறன் கொண்டதாக்குகிறது மற்றும் சுவரில் நீர்க்கசிவிலிருந்து அதிகப் பாதுகாப்பை வழங்குகிறது.
கிடைக்கும் பேக் அளவுகள்