ஜிப்காட்

உங்கள் அறையில் சீரான சுவர்களையும் குறையற்ற மூலைகளையும் பெற உதவும் அல்டிமேட் பிளாஸ்டெரிங் தீர்வு.

Loading

ஜிப்காட்

உங்கள் அறையில் சீரான சுவர்களையும் குறையற்ற மூலைகளையும் பெற உதவும் அல்டிமேட் பிளாஸ்டெரிங் தீர்வு.
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் ஜிப்காட் என்பது உட்புறப் பிளாஸ்டெரிங் பயன்பாட்டிற்கான சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஜிப்சம் பிளாஸ்டெர் ஆகும். இதை வழக்கமான சிமெண்ட் மணல் பிளாஸ்டெருக்கு மாற்றாக உட்புறச் செங்கல் கட்டுமான AAC ப்ளாக்குகளின் மீது நேரடியாகப் பூசலாம். மாற்றாக, சமன் செய்யப்பட்ட மேற்பரப்பு மற்றும் சீரான பூச்சைப் பெறுவதற்காகப் பிளாஸ்டெர் பூசப்பட்ட சுவர்களில் சமன் செய்யும் பொருளாக இதைப் பயன்படுத்தலாம். சரியாகப் பூசப்பட்ட மற்றும் சமன் செய்யப்பட்ட ஃபினிஷ் மற்றும் மூலைகளை உருவாக்குவதற்கு இது சிறந்தது. ஜிப்காட்டின் சிறப்பான தனியுரிம சேர்க்கைப் பொருட்கள் எடை அதிகமாக இல்லாத அதே வேளையில் அதற்குச் சிறந்த இறுக்க வலிமையையும் தருகிறது, இது கட்டமைப்பின் நிலைச்சுமையை வழக்கமான சிமெண்ட் மற்றும் மணல் பிளாஸ்டெரைக் காட்டிலும் குறைக்கிறது. அது தவிர, இதற்கு நீர் ஊற்றி உலர விட வேண்டிய தேவையில்லை, அதனால் நேரத்தை மிச்சப்படுத்துகிறது, மேலும் மேற்பரப்பு 72 மணி நேரத்திற்குள் பெயிண்ட் செய்யத் தயாராக இருக்கும்.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
No Water Curing
Shrinkage Crack Resistant
Easy to Apply
Economical Value for Money
சிறப்பம்சங்கள்
  • பசுமைக் கட்டிடத் தயாரிப்பு.
  • அதிகக் கவரேஜ் கொண்டது மற்றும் சிக்கனமானது
  • 0.008-0.01 மீட்டர் தடிமன் வரை பூசலாம்
  • நீர் ஊற்றி உலர விட வேண்டிய தேவையில்லை
  • சுருக்க விரிசல் எதிர்ப்பு திறன் கொண்டது
நன்மைகள்:
  • பூசுவதற்கு எளிதானது, வெறுமனே தண்ணீரைச் சேர்க்கவும்
  • குறைந்தபட்ச முயற்சியுடன் உங்கள் சுவர்களில் சரியான மூலைகளையும் சம மட்டமான ஃபினிஷையும் அடையுங்கள்.
  • சிமெண்ட் மணல் பிளாஸ்டெரை விடச் சிறந்த ஒலியியல் மற்றும் காப்பு பண்புகள்
  • நீர் ஊற்றி உலர விட வேண்டிய தேவையில்லை, மேலும் மேற்பரப்பு 72 மணி நேரத்திற்குள் பெயிண்ட் செய்யத் தயாராக இருக்கும்

The technology used to manufacture this product is ‘Patent Pending’.

பயன்பாடுகள்
Surface Preparation
மேற்பரப்பை ஆயத்தப்படுத்துதல்
  • "பிர்லா ஒயிட் ஜிப்காட்டை" பூசுவதற்கு முன்பு உப்புத்தாள், புட்டி பிளேடு அல்லது வயர் பிரஷின் உதவியுடன் தளர்வாக ஒட்டிக்கொண்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் சுவரின் மேற்பரப்பிலிருந்து அகற்றவும். தூசி, கிரீஸ் மற்றும் தளர்வான பொருட்கள் எதுவுமின்றி அடிப்பரப்பு சுத்தமாக இருக்க வேண்டும். போதுமான அளவு சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்திச் சுவரை ஈரமாக்கவும்.
  • அடிப்பரப்பை முன்கூட்டியே ஈரமாக்குதல் - பூசுவதற்கு முன்னர்ப் பரப்பை முன்கூட்டியே ஈரமாக்க வேண்டும், இது எளிதான வேலைத்திறன், அதிகக் கவரேஜ் மற்றும் மேற்பரப்புடன் அதிகப் பிணைப்பு வலிமை ஆகியவற்றை உறுதி செய்கிறது.
  • கலவை செயல்முறை: - பிர்லா ஒயிட் ஜிப்காட்டின், கட்டி இல்லாத பேஸ்ட்டை உருவாக்க 60-65% சுத்தமான தண்ணீரை மெதுவாகச் சேர்க்கவும். ஒரு சீரான பேஸ்ட் உருவாகும் வரை கலக்குவதை 2-3 நிமிடங்கள் தொடரவும். “பிர்லா ஒயிட் ஜிப்காட்டின்” கலவை, நன்றாகக் கலக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். இது சுலபமாகப் பூசுவதற்கும் அதிகமான கவரேஜைப் பெறுவதற்கும் உதவுகிறது. தண்ணீருடன் கலக்கப்பட்டு 15 நிமிடங்களுக்குள் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு மட்டும் தயார் செய்யவும்.
சீரான மற்றும் சம மட்டமான ஃபினிஷைப் பெறுவதற்குச் சமப்படுத்தல் ஸ்டிரிப்களை உருவாக்குதல்.
  • தண்ணீர் மட்டக் குழாயைப் பயன்படுத்தி அலைவைக் கண்டறியுங்கள் மற்றும் செங்குத்து மட்டத்திற்குப் பிளம்பைப் பயன்படுத்துங்கள்.
  • ஒவ்வொரு 1.2192 மீட்டருக்கும் ஜிப்காட் பேஸ்ட்டைப் பயன்படுத்திப் புல் மார்க்கை இடவும்.
  • அலுமினியப் பேட்டனை (கீழ்ப் பட்டி) புல் மார்க்குகளின் மீது வைத்து, கற்கட்டுமானத்துக்கும் அலுமினியப் பேட்டனுக்கும் இடையிலான இடைவெளியைப் பிர்லா ஒயிட் ஜிப்காட் பேஸ்ட்டைப் பயன்படுத்தி நிரப்பி உலர வைப்பதன் மூலம் செங்குத்தான சமப்படுத்தல் ஸ்டிரிப்களை உருவாக்கவும்.
  • அலுமினியப் பேட்டனை மெதுவாக அகற்றிவிட்டு ஜிப்காட்டைப் பயன்படுத்திச் சமப்படுத்தல் ஸ்டிரிப்களின் மீது ஃபினிஷ் செய்யுங்கள்
Creating Levelling strips for Line and Level finish
Application
பூசுதல்
  • "பிர்லா ஒயிட் ஜிப்காட்டை" நன்றாகக் கலக்கிய பின்னர், முதல் பூச்சைக் கொல்லறு பயன்படுத்திச் சமப்படுத்தல் ஸ்டிரிப்களின் இடையே கீழிருந்து மேலாகச் சீராகப் பூசவும்.
  • தேவைப்பட்டால் அலைவுகளின் மட்டம் வரை மற்றொரு பூச்சைப் பூசவும்
  • கலவை கெட்டியாவதற்கு முன்பு அலுமினியம் ஃப்ளோட்டைப் பயன்படுத்தி மேற்பரப்பைச் சமப்படுத்தவும்
  • மேற்பரப்பை உலர விடவும்
  • சீரான ஃபினிஷைப் பெறுவதற்காக ஜிப்காட்டின் நீர்மக்குழம்பைப் பயன்படுத்தி மேற்பரப்பில் ஃபினிஷ் செய்யவும்
  • பிளாஸ்டரின் தடிமன் 0.008-0.10 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  • பிர்லா ஒயிட் ஜிப்காட்டைக் கலக்குவதற்குச் சுத்தமான வாளியைப் பயன்படுத்தவும். மேலும், அடுத்த பயன்பாட்டிற்கு ஆயத்தப்படுத்துவதற்காக, முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட கலவையின் எச்சத்தை முழுமையாக அகற்றவும்.
  • கெட்டியான பேஸ்ட்டை மீண்டும் கலக்க வேண்டாம்.
  • தொடர்ச்சியான ஈரப்பதத்திலிருந்து மேற்பரப்பு பாதுகாக்கப்பட வேண்டும்
  • பூசப்படும் போது விரைவான நீர் இழப்பை உறுதி செய்ய வேண்டும்; இல்லையெனில், அதன் வலிமை பாதிப்படையும்.
டெக் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ்
உலர்ந்தஒட்டுமொத்தஅடர்த்தி kg/m3 645-770
நிமிடங்களில்தொடக்கஇறுக்கமாகும்நேரம் 15-25
நிமிடங்களில்இறுக்கமாவதற்கானமுடிவுநேரம் 20-30
தோராயகவரேஜ்* சதுரமீட்டரில் ≥ 80
கரையக்கூடியMgOWt% IS குறியீடு 2547 பகுதி II
கரையும்திறன் Na2O wt% IS குறியீடு 2547 பகுதி II
கிடைக்கும் பேக் அளவுகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All

பிர்லா ஒயிட் ஜிப்காட் என்பது உட்புறச் சுவர்களின் பிளாஸ்டெரிங்கிற்காக வடிவமைக்கப்பட்ட பிரீமியம்-பிளாஸ்டெரிங் தீர்வாகும். இது சீரான மற்றும் சம மட்டமான ஃபினிஷை வழங்குகிறது.

ஜிப்காட் என்பது எளிதாகக் கொட்டக்கூடிய வெள்ளை நிறப் பொடி ஆகும், இது 20 கிலோ, 25 கிலோ மற்றும் 40 கிலோ பைகளில் கிடைக்கிறது.

மிகவும் தூய்மையான சுட்ட ஜிப்சம் மற்றும் சிறப்பு சேர்க்கைப் பொருட்களை ஜிப்காட் கொண்டுள்ளது. மேலும் அது IS சட்டத்தொகுப்பு 2547 பகுதி II உடன் இணங்குகிறது.

ஜிப்காட்டை எந்த வகையான கற்கட்டுமான வேலையிலும் (செங்கல், ப்ளாக்) நேரடியாகப் பிளாஸ்டெராகப் பூசலாம். மேலும் இதைக் கொத்தப்பட்ட கான்கிரீட் மேற்பரப்பிலும் பூசலாம் (பிணைப்புப்பொருள் பரிந்துரைக்கப்படுகிறது)

ஜிப்காட்டை 0.008-0.10 மீட்டர் தடிமன் வரை பூசலாம். அலைவு 0.008-0.10 மீட்டருக்கு மேல் இருந்தால் சிமெண்ட் போன்ற பொருளின் பின்பூச்சு பரிந்துரைக்கப்படுகிறது

இல்லை, ஜிப்காட் என்பது ஒரு ஹெமிஹைட்ரேட் கலவை ஆகும், இதனால் பூசப்பட்டதற்குப் பிறகு கூடுதலான தண்ணீர் சேர்க்கப்பட வேண்டியதில்லை.

ஜிப்காட்டிற்கு மேல், புட்டியைப் பூசிய பின்னர் அனைத்து வகையான பெயிண்டையும் பூசலாம்

ஆம், எந்தவொரு POP அப்லிகேட்டராலும் ஜிப்காட் பூசப்படலாம்