ஜிப்சோஃபைன்
இயற்கையான சுட்ட ஜிப்சம் பிளாஸ்டெர்
ஜிப்சோஃபைன்
இயற்கையான சுட்ட ஜிப்சம் பிளாஸ்டெர்
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைன் மிகவும் தூய்மையான இயற்கையான ஜிப்சமைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது, இது உட்புறப் பிளாஸ்டெரிங் மென் பூச்சு மற்றும் அலங்காரப் பூச்சு வேலைகளுக்கு ஏற்ற ஒரு ஜிப்சம் ஹெமிஹைட்ரேட் ஆகும். அதன் நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் வார்க்கப்படக்கூடிய தன்மை, அதைக் கள ஒப்பனைக் கூரைகள்(ஃபால்ஸ் சீலிங்) உட்பட அனைத்து வகையான வடிவமைப்புகளுக்கும் பொருந்தக்கூடியதாக்குகிறது. சிறப்பு சேர்க்கைப் பொருட்கள் மற்றும் வலுவான தரக் கட்டுப்பாடுடன், இந்தத் தயாரிப்பு அதிகக் கவரேஜைப் பெறுகிறது மற்றும் சாதாரணப் பிளாஸ்டெரிங் சரிசெய்ய முடியாத அலைவுகளையும் சீராக்குகிறது. இந்தத் தயாரிப்பு பிர்லா ஒயிட் R&D ஆல் செய்யப்பட்ட விரிவான ஆராய்ச்சியின் பலனாகும், மேலும் இது உங்கள் அறைக்கு ஆடம்பர உணர்வை வழங்கும்.
கேலரி
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்
No Water Curing
Shrinkage Crack Resistant
Easy to Appply
Economical & Value for Money
அம்சங்கள்
 • 72% மேம்பட்ட வெண்மை
 • சான்றளிக்கப்பட்ட பசுமை தயாரிப்பு
 • சுருக்கம் மற்றும் விரிசல் எதிர்ப்பு திறன்
 • நீடித்து உழைக்கக்கூடிய ஃபினிஷ்
 • அதிக கவரேஜ்
பயன்கள்:
 • அதிக கவரேஜை வழங்குகிறது
 • நீர் ஊற்றி உலர விட வேண்டிய தேவையில்லை
 • பூசுவதற்கு எளிதானது
 • 5% -க்கும் குறைவான எச்சத்தை விட்டுச்செல்கிறது
 • அதிக வேலைத்திறனைக் கொண்டுள்ளது
 • விலைக்கு ஏற்ற பயனைத் தருகிறது
பயன்பாடுகள்
 • உட்புற சுவர்கள்
பயன்பாடுகள்
Surface Preparation
மேற்பரப்பை ஆயத்தப்படுத்துதல்
 • உப்புத்தாள், புட்டி பிளேடு அல்லது வயர் பிரஷின் உதவியுடன் அழுக்கு, தூசி, கிரீஸ் மற்றும் தளர்வாக ஒட்டிக்கொண்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் சுவரின் மேற்பரப்பிலிருந்து அகற்றவும்.
 • போதுமான அளவு சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்திச் சுவரை ஈரமாக்கவும்.
 • அடிப்பரப்பை முன்கூட்டியே ஈரமாக்கவும், அதன் மூலம் அதிகக் கவரேஜ், பரப்புடனான அதிகப் பிணைப்பு வலிமை, மற்றும் சுலபமான வேலைத்திறன் ஆகியவற்றைப் பெறலாம்.
கலவை
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனின், கட்டி இல்லாத பேஸ்ட்டை உருவாக்க 55-60% சுத்தமான தண்ணீரை மெதுவாகச் சேர்க்கவும். ஒரு சீரான பேஸ்ட் உருவாகும் வரை கலக்குவதை 2-3 நிமிடங்கள் தொடரவும். “பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனின்” கலவை, நன்றாகக் கலக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். இது சுலபமாகப் பூசுவதற்கும் அதிகமான கவரேஜைப் பெறுவதற்கும் உதவுகிறது. மேலும், தண்ணீருடன் கலக்கப்பட்டு 15 நிமிடங்களுக்குள் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு மட்டும் தயார் செய்யவும்.
Mixing
Application
பூசுதல்
 • சுவரின் மேற்பரப்பில் முதல் பூச்சை ஒரு புட்டி பிளேடைப் பயன்படுத்திக் கீழிருந்து மேலே சீராகப் பூசுங்கள்.
 • சுவரின் மேற்பரப்பில் உள்ள ஏதாவது கூடுதல் பொருளை அகற்றுவதன் மூலம் ஒரு புட்டி பிளேடைப் பயன்படுத்தி மேற்பரப்பைச் சமன் செய்யவும்.
 • தேவைப்பட்டால், சீர்படுத்துவதற்காக அதன் மேலே பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனின் மற்றொரு பூச்சைப் பூசவும்.
 • மேற்பரப்பை உலர விடவும்.
தொழில்நுட்பத் தரவரைவுகள்
தொழில்நுட்ப வரைகூறுகள் பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைன்
Setting Time (Min.) 15-25
Density kg/m3 720-800
Compressive Strength N/m2 1-3
Coverage in square meter/25kg bag (0.001-0.003 meter) 23.2258 square meter
Whiteness (%) 72+
Residue (%) <5

*Coverage is based at 0.001-0.003 meter thickness under ideal working conditions.

Storage: Store on an elevated platform in a dry place

Packing: Available in SKUs of 20kg, 25kg and 40kg

Shelf Life: 3 months

கிடைக்கும் பேக் அளவுகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைன் என்பது மிகவும் தூய்மையான இயற்கையான ஜிப்சமிலிருந்து சுடுதல் (கால்ஸினேஷன்) செயல்முறை மூலமாகத் தயாரிக்கப்படும் ஒரு ஜிப்சம் ஹெமிஹைட்ரேட் ஆகும், மேலும் இது உட்புறக் கற்கட்டுமான சுவர்கள், கள ஒப்பனை கூரைகள் மற்றும் வடிவமைப்பு வேலைகள் ஆகியவற்றின் பிளாஸ்டெரிங் மற்றும் பன்னிங்கிற்கு ஏற்றது.
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைன் அடிப்படையில் மிகவும் தூய்மையான இயற்கையான சுடப்பட்ட ஜிப்சம் தூளால் ஆனது.
உட்புறச் சுவரில் பிளாஸ்டெரிங் பூச்சு வேலை தவிர, கார்னிஸ்கள், கூரை ரோஜாக்கள், வார்ப்புகள், வளைவுகள் மற்றும் கள ஒப்பனை கூரைகளை உருவாக்கவும் பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனைப் பயன்படுத்தலாம்.
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனை AAC ப்ளாக்குகள், கொத்தப்பட்ட RCC மேற்பரப்பு சுவர்கள் மற்றும் பிளாஸ்டெர் பூசப்பட்ட சுவர்கள் ஆகியவற்றின் மீது பூசலாம்.
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைன் பூச்சுக்கு ஏற்ற தடிமன் 0.003-0.005 மீட்டர் என்ற அளவில் உள்ளது.
இல்லை, பூசப்பட்ட பிறகு பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனை நீர் ஊற்றி உலர விட வேண்டிய தேவையில்லை.
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனுக்கு மேல், புட்டியைப் பூசிய பின்னர் அனைத்து வகையான பெயிண்டையும் பூசலாம்.
இல்லை, எந்தவொரு POP அப்லிகேட்டராலும் பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைன் பூசப்படலாம்.
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனின் தேக்க ஆயுள் 3 மாதங்களாகும்.
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைன் என்பது எளிதாகக் கொட்டக்கூடிய வெள்ளை நிறப் பொடி ஆகும், இது 20 கிலோ, 25 கிலோ மற்றும் 40 கிலோ பேக்குகளில் கிடைக்கிறது.
பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைன் உலர்ந்த உயரமான இடத்தில் சேமித்து வைக்கப்பட வேண்டும்.
நீங்கள் பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனைக் கலக்குவதற்குச் சுத்தமான வாளியைப் பயன்படுத்துவது முக்கியம். அடுத்த பயன்பாட்டிற்கு ஆயத்தப்படுத்துவதற்கு முன்பு, முன்னர்ப் பயன்படுத்தப்பட்ட கலவையின் எச்சத்தை அகற்றவும். மேலும், நீங்கள் கெட்டியான பேஸ்ட்டைக் கலக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ச்சியான ஈரப்பதத்திலிருந்து மேற்பரப்பு பாதுகாக்கப்பட வேண்டும் மேலும் அதன் வலிமை பாதிப்படையாமல் இருப்பதற்காக விரைவான நீர் இழப்பை உறுதி செய்ய வேண்டும்.
ஆம், பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைன் க்ரீன்ப்ரோ தரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது, மேலும் க்ரீன்ப்ரோ சான்றிதழைப் பெறவும் தகுதியானதாய் உள்ளது.
பிர்லா ஒயிட், CASC ஆதரவுக்காக (வாடிக்கையாளர் பயன்பாட்டு ஆதரவு செல்) இந்தியா முழுவதும் பயிற்சி பெற்ற மற்றும் ஈடுபாடான கட்டிடப் பொறியாளர்கள் குழுவைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டிடப் பொறியாளர்கள் ஆன்-சைட் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆன்-சைட் சாம்ப்லிங்கை வழங்குகிறார்கள். மேற்பரப்பு ஃபினிஷ் செய்யும் அப்லிகேட்டர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் நவீனக் கருவிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள், அவை நிபுணத்துவத்தை உருவாக்க மற்றும் நிபுணத்துவம் மிகுந்த பிர்லா ஒயிட் அப்லிகேட்டர்களாக மாற அவர்களுக்கு உதவுகின்றன.
தற்போது ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான விருப்பத் தேர்வு இல்லை. மேலும், நாங்கள் இப்போது எந்தவொரு தயாரிப்புகளையும் நேரடியாக வழங்குவதில்லை. அவை எங்கள் ஸ்டாக்கிஸ்ட் நெட்வொர்க் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், பிர்லா ஒயிட் ஜிப்சோஃபைனைப் பூசுவதற்குப் பயிற்சி பெற்ற ஒப்பந்தக்காரர் தேவை. எனவே, எங்கள் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்/ஸ்டாக்கிஸ்டிடமிருந்து தயாரிப்பை வாங்கப் பரிந்துரைக்கிறோம், அவர்கள் ஒரு பயிற்சி பெற்ற திறமையான ஒப்பந்தக்காரருடன் தொடர்பு கொள்ளவும் உதவுவார்கள்.