ஒயிட் சிமெண்ட்

உங்கள் சுவர்களுக்கு மிகவும் வெண்மையான மேற்பரப்பு ஃபினிஷைக் கொடுக்க விரும்புகிறீர்களா? பிர்லா ஒயிட் சிமெண்ட் சரியான தேர்வு ஆகும்!

Loading

ஒயிட் சிமெண்ட்

உங்கள் சுவர்களுக்கு மிகவும் வெண்மையான மேற்பரப்பு ஃபினிஷைக் கொடுக்க விரும்புகிறீர்களா? பிர்லா ஒயிட் சிமெண்ட் சரியான தேர்வு ஆகும்!
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் சிமெண்டானது அடிப்படையில் எங்கள் அலகுகளில் தயாரிக்கப்படும் வெள்ளை போர்ட்லேண்ட் சிமெண்ட் ஆகும். இது மிகச்சிறந்த நேர்த்தியையும் வெண்மைத் தன்மையையும் தருகிற மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன உற்பத்தி செயல்முறையைப் பயன்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது அதிக ஒளிவிலகல் குறியீடு மற்றும் அதிக ஒளிபுகாநிலையைக் கொண்டுள்ளது, மேலும் இது நிறமிகளுடன் கலக்கப்படும்போது கூட அந்த ஸ்மூத் ஃபினிஷைத் தருகிறது. இது வண்ணங்கள், கட்டமைப்புகள், வடிவங்கள் மற்றும் அளவுகள் ஆகியவற்றின் பரந்த பாலட்டுடன் விளையாடுவதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு வழங்குகிறது, மேலும் இது அலங்காரப் பெயிண்ட்கள், பிளாஸ்டர்கள், மொசைக் டைல்கள், டெர்ராஸோ ஃப்லோரிங் மற்றும் வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் என்று வரும்போது மிகவும் விரும்பப்படுகிறது.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
மென்மையான பினிஷ்
உயர்ந்த தொழில்நுட்பம்
முதன்மையான தரம்
உலக தர ஆலை
சிறப்பம்சங்கள்
 • ஹண்டர் ஒயிட்னெஸ் அளவுகோலில் + 89%
 • உயர் ஒளிவிலகல் குறியீடு
 • 60 MPa உயர் சுருக்க வலிமை
 • 370-400 பிளேனின் உயர்ந்த நேர்த்தி
 • அதிக ஒளிபுகாநிலை
நன்மைகள்:
 • வண்ணத்தின் உண்மையான தொனியைச் சித்தரிக்கிறது
 • குறைந்த நுகர்வு & நிறமியின் சிறந்த விரவல்
 • சிறந்த கவரேஜ்
 • திறமிக்க பளபளப்பை அளிக்கிறது
 • வடிவமைப்புகளை உருவாக்கச் சுதந்திரம் அளிக்கிறது
உபயோகம்
 • தரை
 • சுவர்கள்
 • மற்றவை

The technology used to manufacture this product is ‘Patent Pending’.

பயன்பாடுகள்

தரைகள்

டிசைனர் ஃப்லோரிங்
டிசைனர் ஃப்லோரிங் தரைகள்
பிர்லா ஒயிட் சிமெண்ட் என்பது உங்கள் தரைகளைக் கலைப் படைப்புகளாக மாற்றி, அந்த டிசைனர் தரையை உங்களுக்கு வழங்கக்கூடிய ஒரு தயாரிப்பு ஆகும். உங்களிடம் பளிங்கு தூள், பருஞ்சல்லி மற்றும் பிர்லா ஒயிட் சிமெண்ட் கலவை இருக்கும்போது, ​​தனித்துவமான வடிவங்களிலிருந்து உண்மையான ஓவியங்கள் வரை எதையும் நீங்கள் உருவாக்கலாம். கண்ணாடி, உலோகம், கல் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஸ்ட்ரிப்புகள், காரைக் கலவைகள், வண்ணமயமான நிறமிகள் மற்றும் பலவற்றை உங்கள் கலவையில் செய்யலாம். இதையெல்லாம் நீங்கள் அமைத்தவுடன், அந்தச் சரியான பளபளப்பைப் பெற உங்கள் தரையை மிரர்-பாலிஷ் செய்யலாம். இது உங்கள் தரைக்கு கவர்ச்சியைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டின் சுற்றுப்புறத் தோற்றத்தையும் மேம்படுத்தி காண்பிக்கும்.
மொசைக் டைல்கள் தரைகள்
மொசைக் டைல்கள் உங்கள் தரையில் ஒரு ஆடம்பர வடிவமைப்பு தோற்றங்களை உருவாக்குகிறது. சிமெண்ட்டில் பதிக்கப்பட்ட நிறமூட்டப்பட்ட எனாமெல் கண்ணாடியின் சிறிய துண்டுகள் அல்லது மார்பிள் சில்லுகளுடன், இந்த டைல்கள் உங்கள் தரையின் மீது ஆர்வத்தை வழங்குகிறது. அவற்றை, எளிதில் தேயாத மேற்பரப்புடன், நீடித்து உழைக்கக்கூடியதாக, அடர்த்தியானதாக மற்றும் நீர் புகாதவாறு உருவாக்குவதற்காக அவை கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ் ஹைட்ராலிக் ப்ரெஸ்களில் தயாரிக்கப்படுகின்றன. பிர்லா ஒயிட் சிமெண்ட், நிறங்களைப் பிரகாசப்படுத்த உதவுகிறது மற்றும் உள்ளார்ந்த வலிமையை வழங்குகிறது என்பதால் இது இந்த மொசைக் டைல்களைத் தயாரிப்பதற்கான சரியான தளமாக உள்ளது. வீடுகள், ஹோட்டல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் மற்றும் ஒரு ஸ்டைலைப் பெற விரும்பும் மற்ற ஏதாவது இடத்திற்கு இந்த டைல்கள் ஏற்றது.
மொசைக் டைல்கள்
பேவர் டைல்கள்
பேவர் டைல்கள் தரைகள்
உட்புற தரைகளைப் போலவே சுற்றுப்புறத் தோற்றத்தை உருவாக்குவதில் வெளிப்புறத் தரைகளும் முக்கியக் பங்கு வகிக்கின்றன. பேவர் டைல்கள் இங்குதான் உள்ளே வருகின்றன. அவை வலுவானவை மற்றும் நீடித்து உழைப்பவை மட்டுமல்ல, அவை நிறைய தேய்மானங்கள் ஏற்படும் பகுதிகளுக்கும் சரியானவை. பிர்லா ஒயிட் சிமெண்ட் அத்தகைய பயன்பாடுகளுக்கு ஏற்றது, ஏனெனில் இது டைல்களுக்கு பல வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளை வழங்க உதவும். இந்த டைல்களின் ஒரு குறிப்பிடத்தக்க நன்மை என்னவென்றால், கான்கிரீட் தரைகளுக்குச் செய்யும் செலவின் ஒரு பகுதியிலேயே அவற்றைச் சரிசெய்யலாம் அல்லது மாற்றலாம்.
மார்பில் ஃப்லோரிங் தரைகள்
பளிங்கு கல் இயற்கையாகவே வெண்மையானது மற்றும் நேர்த்தியானது என்றாலும், இது ஒளிகசி தன்மை கொண்டது மற்றும் இயற்கையில் நுண்துகள்கள் கொண்டது. பளிங்கானது ஒரு சாம்பல் நிறச் சிமெண்ட் தளத்தில் போடப்பட்டால், அது மந்தமாகவும் சாம்பல் நிறமாகவும் தோற்றமளிக்கும், இதனால் அதன் அழகியல் அழகை இழக்கும். பிர்லா ஒயிட் சிமெண்ட் நீர்மக்குழம்பின் மெல்லிய அடுக்கில் பளிங்கை அமைப்பது சிறந்தது. பிர்லா ஒயிட் ஒரு வெள்ளை பிரிப்பானாகச் செயல்படுகிறது மற்றும் 100% ஒளியைப் பிரதிபலிக்கிறது, அதே நேரத்தில் சாம்பல் நிறச் சிமெண்ட் உங்கள் பளிங்கின் தோற்றம் கெடுவதை தடுக்கிறது.
மார்பில் ஃப்லோரிங்

சுவர்கள்

ஸ்டோன்கிரீட்
ஸ்டோன்கிரீட் சுவர்கள்
பிர்லா ஒயிட் சிமெண்டுடன் உங்கள் வீட்டின் வெளிப்புறச் சுவர்களுக்கு ஒரு நேர்த்தியான ஸ்டோன்கிரீட் ஃபினிஷைக் கொடுங்கள். சூழல் எதிர்ப்புத்திறன், நீண்ட கால நீடிப்பு மற்றும் குறைந்த பராமரிப்பினை அளிப்பதோடு, உங்களுக்கு வெவ்வேறு வண்ணங்களையும் வடிவமைப்புகளையும் பெற வழிவகுக்கிறது. பிர்லா ஒயிட் சிமெண்ட் மற்றும் டோலமைட் பவுடர் / குவார்ட்ஸ் சாண்டின் சமப் பங்கைக் கலந்து ஸ்டோன்கிரீட் ஃபினிஷை நீங்கள் செய்யலாம். இதற்காக, நீங்கள் விரும்பிய ஷேடைப் பெற நிறமிகளைச் சேர்க்கலாம். பயன்பாட்டிற்குப் பின்னர், மேற்பரப்பைச் சமன் செய்து இரண்டு நாட்களுக்கு நீர் தெளித்து காய விட வேண்டும். இறுதியாக, உங்கள் ஸ்டோன்கிரீட் ஃபினிஷை முடிக்க அந்த நேர்த்தியான அஷ்லர் ஸ்டோன் ஃபினிஷை கொடுக்க நீங்கள் அதைச் செதுக்க வேண்டும்.
கிரிட் வாஷ் சுவர்கள்
நீங்கள் ஒரு சொரசொரப்பான மற்றும் கடினமான ஃபினிஷை விரும்பினால், கிரிட் வாஷ் உங்களுக்குச் சரியான தேர்வாகும். எக்ஸ்போஸ் அக்ரிகேட் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் இந்தக் கடினமான அலங்காரப் பூச்சு கடுமையான வானிலைகளை எளிதில் தாங்கி, நீண்ட ஆயுளை உங்களுக்குத் தருகிறது. 2.5:1:6 என்ற விகிதத்தில் பிர்லா ஒயிட் சிமெண்ட்டின் காரை, டோலமைட் பவுடர் மற்றும் சில்லுகள் ஆகியவை ஒரு கிரிட் வாஷுக்குச் சரியானது. பயன்பாட்டிற்கு முன், மேற்பரப்பை நன்கு சமன் செய்ய வேண்டும். 1-2 மணிநேர ஆரம்பச் செட்டிங் நேரத்திற்குப் பிறகு, கிரிட் வாஷ் மேற்பரப்பைச் சில்லுகளின் மேல் உள்ள சிமெண்டை அகற்றவும், சல்லிகளை வெளிப்படுத்தவும் நைலான் பிரஷ் மற்றும் தண்ணீருடன் மெதுவாகத் துடைக்க வேண்டும்.
கிரிட் வாஷ்
டைரோலியன்
டைரோலியன் சுவர்கள்
டைரோலியன் என்பது உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு ஏற்ற ஒரு அலங்கார ஃபினிஷ் ஆகும். பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது, அதன் டெக்ஸ்சர்டு சாண்டு-ஃபேஸ் ஃபினிஷானது சுவருக்குக் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கிறது. மேலும், இது ஒரு சிக்கனமான, நீண்ட கால நீடிக்கும் மற்றும் பராமரிப்பு தேவை இல்லாத பிளாஸ்டர் ஆகும். டைரோலியன் ப்ளாஸ்டெரிங்கிற்கு, பிர்லா ஒயிட் சிமெண்டின் மூன்று பங்கைப் பளிங்கு தூளின் ஒரு பங்கு மற்றும் கரடுமுரடான வெள்ளை மணல் அல்லது பளிங்கு சில்லுகளின் சிறந்த கிரெயின்களின் ஒரு பங்குடன் கலக்கவும். விரும்பிய ஷேடைப் பெற வண்ணத்தைச் சேர்த்து இரண்டு பூச்சுகளைப் பூசவும். மேற்பரப்பு முற்றிலுமாக உலர்ந்து போகும்போது, ​​தூசி இல்லாததாக வைத்திருக்கச் சிலிக்கான் பூச்சு பூசப்பட வேண்டும்
சிமெண்ட் வாஷ் சுவர்கள்
பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ் சுவர்களுக்கு நீடித்த, பளபளப்பான மேட் ஃபினிஷை அளிக்கிறது. இது அலங்காரப் பெயிண்ட்களுக்கு ஒரு ப்ரைமர் பூச்சாகவும் செயல்படுகிறது, சிறிய விரிசல் மற்றும் பிளவுகளை நிரப்புகிறது. உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு ஏற்றது, இது ஒரு பிரஷ் அல்லது ஸ்பிரேவைப் பயன்படுத்திப் பூசப்படலாம். அதன் பயன்பாட்டின் எளிமைதான் பெயிண்டர்கள் மற்றும் மேசன்களிடையே இதை மிகவும் விரும்பத்தக்கதாக்குகிறது. பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ் மற்ற விருப்பத் தேர்வுகளுடன் ஒப்பிடும்போது சிக்கனமானது, இது வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரும்பாலும் பட்ஜெட் கட்டுப்பாடு இருக்கும் பிற இடங்களுக்குச் சரியானதாக அமைகிறது.
சிமெண்ட் வாஷ்
சிமெண்ட் பெயிண்ட்
சிமெண்ட் பெயிண்ட் சுவர்கள்
சிமெண்ட் பெயிண்ட்டானது வெளிப்புறச் சுவர்களை அழகுபடுத்துவதோடு கடுமையான வானிலைகளிலிருந்து பாதுகாக்கிறது. இது நீடித்து உழைக்கக்கூடியது, சிக்கனமானது மற்றும் பல்வேறு வகையான ஷேட்களைக் கொண்டு வரப் பல்வேறு நிறமிகளுடன் பயன்படுத்தலாம். சிமெண்ட் பெயிண்ட் தயாரிப்பதற்குப் பிர்லா ஒயிட் மட்டுமே சிறந்த வழி, ஏனெனில் இது நிறமியின் உண்மையான வண்ணங்களை வெளிப்படுத்துகிறது, ஆனால் அத்துடன் இது குறைந்த கார உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளதால் பெயிண்ட் மங்குவதைத் தடுக்கிறது. ஒரு சரியான கலவைக்கு, இரண்டு பங்கு சிமெண்ட் பெயிண்ட்டில் ஒரு பங்கு தண்ணீரைச் சேர்த்துச் சீரான பேஸ்ட்டைப் பெற நன்கு கலக்கவும். இதற்கு, இன்னும் ஒரு பங்கு தண்ணீரைச் சேர்த்து, கலக்கி, தயார் செய்யப்பட்ட மேற்பரப்பில் பூசவும். சரியான ஃபினிஷைப் பெற 2-3 நாட்களுக்கு மேற்பரப்பைத் தண்ணீரால் நீராற்றவும்.

மற்றவை

சிமெண்ட் பொதுவாகக் கட்டுமானம் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு மட்டுமே பொருத்தமானது என்று கருதப்படுகிறது. ஆனால் பிர்லா ஒயிட் ஒரு புதிய தரக்குறியை அமைத்துள்ளது. இது வழக்கமானதையும் தாண்டி அதன் பயன்பாட்டினை நீட்டித்துள்ளது, இப்போது அது பல்வேறு படைப்பு விருப்பங்களை வழங்குகிறது.
ORNAMENTAL | CEILINGS | VERSATILE USAGE
ஆர்னமென்டல் மற்றவை
பிர்லா ஒயிட் சிமெண்ட் உங்கள் கற்பனையைப் பயன்படுத்திக் கட்டிட உட்புறங்களையும் வெளிப்புறங்களையும் அழகுபடுத்தவும், அலங்கரிக்கவும் வடிவமைக்கவும் உதவுகிறது. சிலைகள், கலைப்பொருட்கள், மாடி கைப்பிடிச்சுவர்கள், பூந்தொட்டிகள், அலங்காரக் கிரில்ஸ், நீரூற்றுகள் மற்றும் பலவற்றைப் போன்ற அலங்கார வடிவங்களை உருவாக்க இது உங்களுக்குச் சுதந்திரம் அளிக்கிறது.
கூரைகள் மற்றவை
சுவர்கள் மற்றும் தரைகள் என்று வரும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் பிர்லா ஒயிட் சிமெண்ட் கூரையைப் பொறுத்தவரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு சிறந்த ஃபினிஷைக் கொடுக்க உதவுகிறது.
பல்துறை பயன்பாடு மற்றவை
செராமிக் டைல்கள், விட்ரிஃபைட் டைல்கள், ஸ்டோன் டைல்கள் மற்றும் கல் பலகைகள் (டைல் கிரௌட்) ஆகியவற்றின் இணைப்புகளை இணைக்கப் பிர்லா ஒயிட் சிமெண்ட் மிகவும் பொருத்தமானது.
டெக் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ்
சிறப்பியல்புகள் IS: 8042. 2015 தேவை ஸ்பெஸிஃபிகேஷன்ஸ் டிப்பிக்கல் ரேஞ்சு
CHEMICAL
a. Insoluble Residue % Max. 4.0 Max. 2.0 1.0 - 1.6
b. Iron Oxide % Max. 1.0 Max. 0.34 0.28 - 0.34
c. Magnesium Oxide % Max. 6.0 Max. 5.0 3.5 - 5.0
d. Sulphur Trioxide % Max. 3.5 Max. 3.5 2.7 - 3.3
e. Lime Saturation Factor 0.66 - 1.02 Min. 0.86 0.86 - 0.92
f. Loss on Ignition % Max. 7.0 Max. 5.5 3.5 - 5.5
PHYSICAL
a. Degree of Whiteness%
ISI Scale Min. 70 Min. 82 82 - 85
Hunters Scale - Min. 90 90 - 92
b. Fineness, (Blaine) m2/kg (Specific Surface) Min. 225 330 330 - 360
c. Setting Time (Minutes)
1. Initial Min. 30 Min. 80 80 - 100
2. Final Max. 600 Max. 150 120 - 150
d. Soundness
1. Le-Chateliers Method (mm) Max. 10 Max. 2.0 1.0 - 2.0
2. Autoclave Expansion % Max. 0.8 Max. 0.2 0.08 - 0.2
e. Compressive Strength (Mpa)
(Cement and Std. Sand Mortar 1:3)
3 days 72 ± 1hr Min. 16.0 Min. 35 35 - 40
7 days 168 ± 2hr Min. 22.0 Min. 45 45 - 50
28 days 672 ± 4hr Min. 33.0 Min. 55 55 - 60
f. Retention on 63 micron sieve % - Max. 3.0 0.6 - 3.00
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All
பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ் என்பது புதிதாகப் பூசப்பட்ட உட்புற மற்றும் வெளிப்புற மேற்பரப்புகளைப் பூசுவதற்கான வெள்ளை சிமெண்டின் நீடித்த பயன்பாடு ஆகும்.
பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ் பெரும்பாலும் சிமெண்ட் மற்றும் பிளாஸ்டர் மேற்பரப்பில் ஏற்படும் சிறு விரிசல்களை நிரப்புகிறது. இது கட்டமைப்பில் நீர் வெளியேறுவதைக் குறைக்கிறது, அதே நேரத்தில் அடுத்தடுத்த பெயிண்ட் மற்றும் ப்ரைமர் பூச்சுகளுக்கான கீழ்பூச்சாகவும் செயல்படுகிறது. சிறந்த வெள்ளை சிமெண்ட் பயன்பாடுகளில் ஒன்று, இது பெயிண்ட்டானது அடித்தளத்தால் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது, அதே நேரத்தில் அதிகக் கவரேஜையும் உறுதி செய்கிறது. பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ் உங்களுக்கு அந்த ஆயுள் காரணியைத் தரும் ஒரு படலத்தை அடித்தளத்தில் உருவாக்குகிறது, பின்னர்ப் பெயிண்ட் செதில்களாவதோ அல்லது உரிவதோ இல்லை என்பதை உறுதி செய்கிறது. இது சுவருக்குச் சிறந்த பிரகாசத்தையும் தருகிறது.
ஆம், பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷின் பயன்பாட்டுக்குப் பிறகு குறைந்தது 2 முதல் 3 நாட்களுக்கு நீர் தெளித்து காய விட வேண்டும்.
சீரான பூச்சைப் பெறப் பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷின் சுமார் 2 முதல் 3 பூச்சுகள் போதும். ஆனால் இது ஒரு கீழ்ப் பூச்சாகப் பயன்படுத்தப்பட்டால், ஒரு பூச்சு போதுமானது.
அடித்தள மேற்பரப்பு தூசி, கிரீஸ், காரை எச்சம் போன்றவை இல்லாததாக இருக்க வேண்டும். பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷின் பயன்பாட்டிற்கு முன், மேற்பரப்பானது முன்கூட்டியே ஈரப்படுத்தப்பட வேண்டும். ஒட்டும் தன்மை இழப்பு மற்றும் சிமெண்ட் வாஷில் தூசி படிதல் ஆகியவற்றைத் தவிர்க்க இந்தப் படி முக்கியமானது.
உண்மையில், இது பரிந்துரைக்கப்படவில்லை. நீங்கள் எந்தப் பெயிண்ட் பூசப்பட்ட மேற்பரப்பிலும் அதைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், உங்கள் மேற்பரப்பை முழுமையாகத் தயார் செய்திருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிமெண்ட் பூச்சானது அடிப்படை அடி மூலக்கூறுடன் வலுவான பிணைப்பைக் கொண்டிருக்க இது உதவும்.
மேற்பூச்சு பெயிண்ட் பயன்படுத்தப்படாவிட்டால் பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ் சுமார் 2 முதல் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும். மேற்பூச்சில் , இவை நீண்ட காலம் நீடிக்கும்.
கவரேஜ் அடி மூலக்கூறின் தன்மையைப் பொறுத்தது. அடி மூலக்கூறு நுண் துளைகளுடன் இருந்தால், அது குறைவாக இருக்கும், மற்றும் நேர்மாறாகவும் இருக்கும். வழக்கமாக, 1 கிலோ பிர்லா ஒயிட் சிமெண்டானது ஒரு சாதாரண அடி மூலக்கூறில் இரண்டு பூச்சுகளுக்கு 2.32 சதுர மீட்டர் முதல் 2.79 சதுர மீட்டர் வரை கொடுக்கும்.
சிமெண்ட் பெயிண்ட் என்பது வெள்ளை நிறச் சிமெண்ட், நிரப்பிகள், சேர்க்கைகள், விரிவாக்கிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து விரும்பிய ஷேடைப் பெறுவதன் மூலம் உருவாக்கப்பட்ட பெயிண்ட் ஆகும். சிமெண்ட் வாஷ், மறுபுறம், தூய்மையான வெள்ளை சிமென்ட் நீர்மக்குழம்பு மற்றும் சேர்க்கைகள் இல்லாத ஒரு பூச்சு; இது வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கும்.
ஆம், பிர்லா ஒயிட் சிமெண்டானது கிரீன்ப்ரோ தரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது, மேலும் கிரீன்ப்ரோ சான்றிதழ் பெறவும் தகுதி பெறுகிறது.
தற்போது ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான விருப்பத் தேர்வு இல்லை. மேலும், நாங்கள் இப்போது எந்தவொரு தயாரிப்புகளையும் நேரடியாக வழங்குவதில்லை. அவை எங்கள் ஸ்டாக்கிஸ்ட் நெட்வொர்க் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், பிர்லா ஒயிட் சிமெண்டின் பயன்பாட்டிற்குப் பயிற்சி பெற்ற ஒப்பந்தக்காரர் தேவை. எனவே, எங்கள் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்/ஸ்டாக்கிஸ்டிடமிருந்து தயாரிப்பை வாங்கப் பரிந்துரைக்கிறோம், அவர்கள் ஒரு பயிற்சி பெற்ற திறமையான ஒப்பந்தக்காரருடன் தொடர்பு கொள்ளவும் உதவுவார்கள்.
பிர்லா ஒயிட், சி.ஏ.எஸ்.சி ஆதரவுக்காக (வாடிக்கையாளர் பயன்பாட்டு ஆதரவு செல்) இந்தியா முழுவதும் பயிற்சி பெற்ற மற்றும் ஈடுபாடான கட்டிடப் பொறியாளர்கள் குழுவைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டிடப் பொறியாளர்கள் ஆன்-சைட் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆன்-சைட் சாம்ப்லிங்கை வழங்குகிறார்கள். மேற்பரப்பு ஃபினிஷ் செய்யும் அப்ளிகேட்டர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் நவீனக் கருவிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள், அவை நிபுணத்துவத்தை உருவாக்க மற்றும் நிபுணத்துவம் மிகுந்த பிர்லா ஒயிட் அப்ளிகேட்டர்களாக மாற அவர்களுக்கு உதவுகின்றன
கிடைக்கும் பேக் அளவுகள்
காணொளிகள்