Loading

விதிமுறைகள் & கட்டுப்பாடுகள்

"https://www.birlawhite.com" இணையதளத்திற்கான அணுகலை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் இலவசமாக வழங்குகிறோம். இந்த இணையதளத்தின் பயன்பாடு, மற்றும் அனைத்துத் தகவல்கள், தயாரிப்புகள் (மென்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் ("மென்பொருள்") மற்றும் இத்தளத்தில் உள்ள சேவைகள் (ஒட்டுமொத்தமாக, "சேவைகள்"))அனைத்தும் அமைக்கப்பட்டுள்ள சட்ட விதிகள் ("விதிகள்") அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டதாகும் ("இந்த ஒப்பந்தம்"). எந்தவித முன்னறிவிப்புமின்றி இந்த விதிமுறைகளை அவ்வப்போது திருத்தம் செய்வோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். உங்களுக்கு அறிவிப்பதன் மூலம் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்தாவிட்டால், நாங்கள் தளத்தில் வைக்கும் புதிய அம்சங்கள் அல்லது புதுப்பிக்கப்பட்ட சேவைகள் இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டவை. சேவைகளைப் பெறுவதன் மூலம் அல்லது பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு விதிமுறைகளையும் நீங்கள் ஏற்றுக் கொள்வதோடு ஒப்புதலும் வழங்குகிறீர்கள். அனைத்துச் சேவைகளும் "உள்ளது உள்ளபடி" மற்றும்/அல்லது "கிடைப்பதேற்றவாறு" வழங்கப்படுகின்றன.

இணையதளத்தில் பிற தளங்களுக்கான லின்க்குகள் இருக்கலாம். இதுபோன்ற பிற வலைதளங்களை நீங்கள் பயன்படுத்துவது, அத்தகைய ஒவ்வொரு வலைதளத்திலும் உள்ள பயன்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுடன் பிற தளங்களில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள் இணங்கவில்லை எனில் அத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படியே அத்தளத்தில் உங்கள் பயன்பாடு இருக்கக் கூடும். ஒவ்வொரு இணையதளத்தின் பயன்பாட்டு விதிமுறைகளையும் சரிபார்க்கவும் அதன் மூலம் பொருந்தும் அனைத்து விதிமுறைகளையும் புரிந்து கொள்ளவும்.

தனியுரிமை

இணையதளத்தின் பயன்பாட்டின் போது உங்களிடம் நாங்கள் பெறும் தகவல்கள் அனைத்தும் தனியுரிமை கொள்கைக்கு உட்பட்டது. தனியுரிமை கொள்கையின் முழுத் தகவல்களுக்கு, தயவு செய்து இங்கு க்ளிக் செய்க.