பிர்லா ஒயிட் எவெர்-ஒயிட் சிமென்ட் வாஷ்

சிமென்ட் வாஷிற்கு செல்லுங்கள், உங்களுக்கு நீண்டு நிலைக்கும் நிகரற்ற வெண்மை வேண்டுமாயின்

Loading

பிர்லா ஒயிட் எவெர்-ஒயிட் சிமென்ட் வாஷ்

சிமென்ட் வாஷிற்கு செல்லுங்கள், உங்களுக்கு நீண்டு நிலைக்கும் நிகரற்ற வெண்மை வேண்டுமாயின்
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் ‘‘எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ்’’ என்பது இவ்வகையிலேயே முதன்மையான சிமென்ட் வாஷ் ஆகும், தன்னிகரற்ற நீடித்த உழைப்பு, உன்னதமான பளபளப்பு, மேலும் சிக்கனமான சுவர் பூச்சு தருகிறது. சாதாரண லைம் வாஷைவிட இது பன்மடங்கு உயர்ந்தது மற்றும் நீண்ட காலம் நீடிக்கும்.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
Excel putty with Germ protection & Silver Ion Technology
Silver Ion Technology
Anti-viral, Anti-bacterial, Anti-fungal and Anti-algae
சிறப்பம்சங்கள்
  • சிறு துவாரங்கள்/ஊசி துளைகள், ஹேர்லைன் விரிசல்கள் மற்றும் பள்ளங்களை நிரப்புகிறது
  • மிக உயர்ந்த வெண்மையான ஃபினிஷிங்
  • ஸ்மூத் மேட் ஃபினிஷிங்
  • ஓதமான/ஈரமான சுவர்கள் மீது அப்ளை செய்யலாம்
நன்மைகள்:
  • உரிவதில்லை, உதிர்வதில்லை இது கழுவி செல்வதில்லை
  • 3 ஆண்டுகள் வரை நீடித்து நிற்கிறது
  • சுவற்றிற்கு கூடுதல் உறுதியளிக்கிறது
உபயோகம்
  • உட்புற சுவர்கள்
  • வெளிப்புற சுவர்கள்

டெக் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ்
Sr.No டெக்னிக்கல் அளவுகள் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ் சோதனை முறை
1 * (ச.அ/கிகி/இரண்டு கோட்) [உகந்த ஸ்மூத் பரப்பு மீது] 38-42 இன் ஹவுஸ்
2 பாட் லைஃப் (மணி நேரம்) 1.5-2.0 இன் ஹவுஸ்
3 உலரும் நேரம் @ 25±2 ºC
- டச் டிரை
- ஹார்டு டிரை
அதிகபட்சம் 1 மணி நேரம்
குறைந்தபட்சம் 6 மணி நேரம்
இன் ஹவுஸ்
இன் ஹவுஸ்
4 VOC (மிகி/கிகி) இல்லை ASTM 6886
5 பல்க் டென்சிட்டி (கி/செமீ3) 0.90-1.0 இன் ஹவுஸ்
*இந்த மதிப்பு ஸ்மூத் பரப்பில் உள்ளது, இருப்பினும் இது மேற்பரப்பு அமைப்புக்கு ஏற்ப மாறுபடலாம்.
கிடைக்கும் பேக் அளவுகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All
பிர்லா ஒயிட் எவெர்-ஒயிட் சிமென்ட் வாஷ் ஒரு ஒயிட் சிமென்ட்-பேஸ்டு வாட்டர் தின்னபிள் தயாரிப்பாகும். இது புதிய உட்புற/வெளிப்புற பிளாஸ்டர் செய்த சுவர் மற்றும் காங்க்ரீட்/ RCC பரப்புகள் மீது இரண்டு கோட் அப்ளை செய்வதற்கு உகந்தது.
பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ் மிகவும் நீடித்த, மிகச்சிறந்த, பளபளப்பான மற்றும் மிகவும் சிக்கனமான சுவர் பூச்சு என்னும் மூன்று வாக்குறுதியுடன் வருகிறது. இது ஸ்மூத் மேட் ஃபினிஷை அளிக்கின்றது சிறிய ஹேர்லைன் விரிசல்களையும் பள்ளங்களையும் நிரப்புகிறது. பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ் என்பது இவ்வகையிலேயே முதன்மையான சிமென்ட் வாஷ் ஆகும் இது சாதாரண சிமென்ட் வாஷ் & லைம் வாஷைவிட நீண்ட காலம் நீடிக்கிறது மேலும் சுவர் மீது மிக உயர்ந்த ஒயிட் ஃபினிஷை வழங்குகிறது.
ஆம், பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷிற்கு குறைந்தது 3-5 நாட்கள் வாட்டர் க்யூரிங் தேவைப்படுகிறது (வானிலைக்கேற்ப தினசரி 2-3 முறை)
ஸ்மூத் மேட் ஃபினிஷ் பெற குறைந்தது 2/3 கோட் பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ் போதுமானது. ஆனால் இதை அண்டர்கோட்டாக உபயோகித்தால், ஒரு சிங்கிள் கோட் போதும்.
முதன் முதலில் சுவர் பரப்பு தூசு, கிரீஸ், நீர்புநுரை ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும். பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ் அப்ளை செய்யும் முன், எமெரி/சாண்ட்பேப்பர், பிளேடு அல்லது ஒயர் பிரஷ் உபயோகித்து சுவர் பரப்பிலிருந்து தளர்வாக ஒட்டியுள்ள தூசு, துகள் & ஆயில் ஆகிய எல்லாவற்றையும் நீக்கவும். பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ் அப்ளை செய்வதற்கு முன்பு சிறந்த வேலை திறன், கவரேஜ் & பரப்புடன் உயர்ந்த ஒட்டுதல் உறுதி பெற முன்கூட்டி ஈரமாக்குதல் முக்கியமானதாகும்.
அதற்கு இது அப்ளை செய்ய சாலச் சிறந்ததில்லை. ஆனால் ஏதேனும் பெயின்ட் செய்யப்பட்டுள்ள பரப்பு மீது அப்ளை செய்தாக வேண்டியிருந்தால், தளர்வாக/கெட்டியாக ஒட்டியுள்ளவற்றை நீக்குவதன் மூலம் பரப்பை நீங்கள் நன்றாக தயார் செய்து கொண்டீர்கள் என்று உறுதி செய்துகொள்ளவும். இது பேஸ் பரப்புடன்பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ் கோட் உறுதியாக ஒட்ட ஏதுவாகும்.
கலத்தல் விகிதம் (1:1:2): ஒரே மாதிரியான குழம்பை உண்டாக்க 120% சுத்தமான தண்ணீருடன் 1 கிலோ பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷை சேர்க்கவும் (1 கிலோ எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ் + 1200 மிலி தண்ணீர்).
ஒரு நிலைத்தன்மையைப் பெற மெக்கானிக்கல் ஸ்டிர்ரர் பயன்படுத்தி 3-5 நிமிடமும் / கையினால் 10-12 நிமிடமும் கலக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட குழம்பை 1.5-2.0 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
நன்றாக கலந்த பிறகு, பெயின்ட்டி பிரஷ் (4 அல்லது 5 அங்குலம்)/உகந்த ரோலர் உதவியால் ஈரமாக்கப்பட்ட/நனைத்த சுவர்/மேற்பரப்பு மீது ஒரே சீராக பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷை அப்ளை செய்யவும். சிறந்த பலனைப் பெற, மேற்பரப்பு சரியாக க்யூர் ஆவதற்கு ஒவ்வொரு கோட் ஸ்ப்ரே செய்த பிறகும் 6-8 மணி நேரம் உலர்ந்த பிறகு தண்ணீரை தெளிக்கவும். இரண்டாவது கோட் அப்ளை செய்வதற்கு முன் மேற்பரப்பு உலர்வதற்கு 24 மணி நேரம் அல்லது குறைந்தது இரவு முழுவதும் அப்படியே விட்டுவைக்கவும்.
பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷை அப்ளை செய்யும்போது, சுவர் பரப்பு முன்கூட்டி ஈரமாக்கப்பட்டிருப்பதை முதலில் நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்ளை செய்து முடிக்கும் முன் கலவை கட்டி ஆகிவிடாது இருப்பதை உறுதி செய்து, 2 மணி நேரத்திற்குள் உபயோகிக்கக்கூடிய குறைந்த அளவு கலவையே தயாரிக்கப்பட வேண்டும். அதிக தட்ப்பவெப்ப நிலையில் அப்ளை செய்வதைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது, ஏனெனில் சிமென்ட் விரைவாக செட் ஆகி பரப்பு மீது பிரஷ் மார்க்கை விட்டுச் செல்லும். பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ் இரண்டு கோட்களுக்கு இடைவெளி 24 மணி நேரம் இருக்க வேண்டும்.
கவரேஜ் பரப்பின் தன்மையையும் டெக்ஸரையும் பொறுத்து உள்ளது. பரப்புகளில் நுண் துவாரங்கள் இருப்பின், கவரேஜ் குறைவாகவும், இல்லையென்றால் அதிகமாகவும் இருக்கும். பொதுவாக, 1 கிலோ பிர்லா ஒயிட் எவெர் ஒயிட் சிமென்ட் வாஷ் ஒரு நல்ல ஸ்மூத் பரப்பு மீது இரண்டு கோட்களுக்கு 3.5 சதுர மீட்டர் முதல் 3.9 சதுர மீட்டர் வரை வரும்.