நிறுவனச் சமுதாயப் பொறுப்புகள்
இளமையினை செயல்படுத்துவதே வளர்ச்சியின் திறவுகோலாகும். இந்த வளர்ச்சிக்கு உந்துதலை அளித்துச் சமுதாயத்திற்குச் சேவையாற்றிட நாங்கள் சில நிறுவனச் சமுதாயப் பொறுப்புகளை முன்னெடுத்துள்ளோம். இதனைக் குறித்து மேலும் அரியப் பின்வருபவற்றைப் படியுங்கள்!

Loading

நிறுவனச் சமுதாயப் பொறுப்புகள்
இளமையினை செயல்படுத்துவதே வளர்ச்சியின் திறவுகோலாகும். இந்த வளர்ச்சிக்கு உந்துதலை அளித்துச் சமுதாயத்திற்குச் சேவையாற்றிட நாங்கள் சில நிறுவனச் சமுதாயப் பொறுப்புகளை முன்னெடுத்துள்ளோம். இதனைக் குறித்து மேலும் அரியப் பின்வருபவற்றைப் படியுங்கள்!
கண்ணோட்டம்
உலகில் சிமெண்ட் தொழில் முனைவோர்களில் முதல் 10 இடங்களுக்குள் ஒருவராகப் பிர்லா ஒயிட் உள்ளது. ஆண்டுகள் பல கடந்து, மதிப்பு-கூட்டப்பட்ட தயாரிப்புகள் பலவற்றை நாங்கள் அறிமுகப்படுத்திப் ப்ரீமியம் சிமெண்ட் விற்பனையாளராக எங்கள் இடத்தை நிலை நிறுத்தியுள்ளோம்.

எங்கள் விரிவாக்கப் பயணத்தில் வெற்றிகள் பல கண்டுள்ளோம். எனவே, எங்கள் CSR திட்டங்களை அதிகரிப்பதன் மூலம் சமூகத்திற்குச் சேவையாற்ற முடிவு செய்துள்ளோம். பல்வேறு இடங்களில் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சேவைகளைத் தொடங்கி வைத்துள்ளோம். இது கல்வி, ஆரோக்கியம் & சுகாதாரம், பெண் உரிமை, சிறு வணிகம், நிலையான வாழ்வாதாரம், கால்நடை மேம்பாடு மற்றும் கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றில் ஏற்படுத்தப்படும் வளர்ச்சியினை உள்ளடக்கும்
தொலைநோக்கு பார்வை
"நாம் இருக்கும் இச்சமூகத்தில், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பதன் மூலம், நாட்டின் மனித வளர்ச்சிக்கு வித்திட்டு, சமுதாயத்தின் நலிந்த பிரிவினரின் நிலையான வாழ்க்கை மற்றும் சிறந்ததொரு வளர்ச்சியினைக் கட்டமைப்போம் என்பதை நம்புகிறோம்."
- திருமதி ராஜஸ்ரீ பிர்லா, தலைவர் - ஆதித்யா பிர்லா சென்டர் சமூக முன்னெடுப்புகள் மற்றும் கிராமப்புறச் சுகாதார
முக்கியத்துவம் அளிக்கப்படும் இடம்
Health care

மேம்பாடு

கல்வி

கல்வி

நிலையான வாழ்வாதாரம்

நிலையான வாழ்வாதாரம்

உள்கட்டமைப்பு மேம்பாடு

உள்கட்டமைப்பு மேம்பாடு

சமூக நலம்

சமூக நலம்

Health care

மேம்பாடு

எந்தவொரு நாட்டின் மனித வள மேம்பாட்டின் (HDI) மீதும் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியவைகளுள் ஒன்று சுகாதாரம் எனலாம். இன்றைய அளவில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 68% நபர்களுக்குக் கிராமப்புறமே வீடு, அதில் பாதிக்கும் மேற்பட்டோம் வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருகின்றனர். இது போன்ற மக்கள் சிறந்த மற்றும் எளிதாகச் சுகாதார வசதியினை அடையப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் அன்றாடம் போராடும் ஆரோக்கியச் சிக்கல்கள் தொற்று நோய் முதல் தொற்றாத நோய் வரை நீண்டு கொண்டே செல்கிறது. மலேரியா, நீரிழிவு, ஃப்ளூ மற்றும் இது போன்ற பல நோய்கள் இதில் அடங்கும். பிரசவக் காலத்திற்குப் பின்பு ஏற்படும் உடல் நலக் குறைவு என்பது கிராமப்புற இந்தியாவில் மற்றொரு மோசமான பிரச்சனையாக உள்ளது, மற்றும் பேறுகால இறப்புகளையும் அதிகரிக்கச் செய்கிறது.

இந்தச் சிக்கல்கள் பெரும்பாலும் போதுமான கல்வியறிவு & ஆற்றல் வளமின்மையால் எழுகிறது எனவே, நாங்கள் இந்த இடைவெளியினைக் குறைக்கும் பொருட்டு, கிராமப் புறச் சமூகங்களுக்குப் பல்வேறு ஆரோக்கியச் சேவைக் கட்டமைப்புகளைத் தொடங்கியுள்ளோம். இதனுடன், குழந்தை இறப்பினைக் குறைத்து, மகப்பேறு கால ஆரோக்கிய வளர்ச்சியினை அதிகரித்து மற்றும் மலேரியா, நீரிழிவு, எச்ஐவி/எய்ட்ஸ், மற்றும் பல நோய்களுக்கு எதிராகப் போராடிப் பொற்கால வளர்ச்சி இலக்குகளை (WHO) சந்திப்பதினை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.
Education

கல்வி

இந்தியா உலகிலேயே அதிகமாக இளம் வயது நபர்களைக் கொண்டுள்ளது. நம் நாட்டின் எதிர்காலம் அவர்களிடமே உள்ளது எனவேதான் அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டியது முக்கியம். இந்தியாவின் இளம் வயது நபர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்தே வருவதால் சிறந்த கல்வி கிட்டுவது சவாலாகவே உள்ளது.

எங்கள் CSR முன்னெடுப்புகள் மூலம், இந்தியாவெங்கும் உள்ளா மாணவர்களுக்கு ஊக்கமளிக்கவும் உத்வேகம் கொடுக்கவும் முயன்று வருகிறோம். கல்வி ஊக்கத்தொகைகள் வழங்குதல், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை அங்கீகரித்தல், திறமைகளை வளர்த்தல், செயல்முறை வகுப்புகள் & தொழிற்கல்விகளை நடத்துதல் மற்றும் பலவற்றை மேற்கொண்டு வருகிறோம். வாழ்வில் எதிர்கொள்ளும் குறைபாடுகளைக் கடந்து கல்வியில் சிறந்து விளங்க அடுத்த தலைமுறை மாணவர்களை ஊக்குவிப்பதினை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
Sustainable Livelihood

நிலையான வாழ்வாதாரம்

சிறந்த தரத்திலான வாழ்விற்கு நிலையான வாழ்வாதாரத்தின் முக்கியத்துவத்தினை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். எங்கள் கிராமப்புற CSR முன்னெடுப்புகள் மூலம், மக்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்தி ஊக்கமளிக்க முயற்சி செய்து வருகிறோம் அதன் மூலம் தன்னிறைவை உருவாக்க முடியும்.

மகளிர் சுய-உதவி குழுக்கள், கணினி பயிற்சி, அழகு சார்ந்த கல்வி, மோட்டார் ரீவைண்டிங் படிப்புகள் மற்றும் தையல் மையங்கள் போன்ற பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் எண்ணிலடங்காத் தனி நபர்கள் பலருக்கு உதவி அவர்கள் இலக்கைச் சென்றடையவும் வாழ்வாதரத்திற்கான சம்பாத்தியத்தை ஈட்டவும் உதவி வருகிறோம்.
Infrastructure Development

உள்கட்டமைப்பு மேம்பாடு

எங்கள் திட்டங்களுக்கு அருகிலேயே பல்வேறு இடங்களில் CSR முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளோம். இது மிகச் சிறந்த, அதிகளவிலான நிலையான கட்டமைப்பு அமைய வழிவகுத்துள்ளது. இதனுடன், இது இவ்விடங்களில் நிலையான வாழ்வு மற்றும் பொது வாழ்வின் தர நிலைகளை உயர்த்தவும் உதவியுள்ளது.

கஹாரியா கஹாங்கரில் சாலை கட்டமைப்பு, தானப்பாவில் உள்ள சமூகக் கூடத்தின் புனரமைப்பு, மெரசியாவில் உள்ள கழிவுநீர் வடிகால் கட்டமைப்பு போன்றவற்றை உதாரணங்களாகக் கூறலாம். எங்கள் முயற்சிகளின் வாயிலாக, தொடர்ந்து பல கட்டுமானத் திட்டங்கள் மேற்கொண்டு அதிகப்படியான நபர்களுக்கு உதவுவோம் என நம்பிக்கை கொண்டுள்ளோம்.
Social Welfare

சமூக நலம்

சமூகத்தின் நம்பிக்கையே பிர்லா ஒயிட் என்ற பெயரின் பிரபலத்திற்குக் காரணமாகும். எனவேதான், இச்சமூகத்திற்குத் திருப்பிச் சேவையளித்துப் பலரின் வாழ்க்கையினை மேம்படுத்த உதவ விரும்புகிறோம்.

எங்களின் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், ஆரோக்கியச் சிக்கல்கள், கல்வி சிக்கல்கள் போன்றவற்றைத் தீர்ப்பதோடு எங்களைச் சுற்றி உள்ளவர்களின் ஒட்டுமொத்த வாழ்வினை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். சமூகக் கூட்டங்கள் அமைத்தும், தேவை உள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்தும், ஆதார் கார்டு முகாம்கள் நடத்தியும் மற்றும் மரக் கன்று நடுதல் போன்ற சமூகத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். எங்கள் முயற்சிகளின் மூலம், சமூகத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறோம்.
சேவைக் கிடைக்கப்பெறும் இடங்கள்
சேவை பெறுமிடங்கள்: ஜோத்ப்பூரின் போபல்கர் & மெர்தா பகுதிகள் & ராஜஸ்தான் மாநிலத்தில் நகௌர் மாவட்டங்கள்
சேவைக் கிடைக்கப்பெறும் இடங்கள்