ரீ-பெயிண்ட் புட்டி

உங்கள் சுவர்களை 38%* வேகமாகத் தூசி இல்லாத* வழியில் மீண்டும் பெயிண்ட் செய்யவும், பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியுடன் அந்தக் கண்ணாடி போன்ற ஃபினிஷை அவற்றுக்குக் கொடுங்கள்.

Loading

ரீ-பெயிண்ட் புட்டி

உங்கள் சுவர்களை 38%* வேகமாகத் தூசி இல்லாத* வழியில் மீண்டும் பெயிண்ட் செய்யவும், பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியுடன் அந்தக் கண்ணாடி போன்ற ஃபினிஷை அவற்றுக்குக் கொடுங்கள்.
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியானது உங்களது மீண்டும் பெயிண்ட் செய்யும் தேவைகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்படுகிறது! இது மீண்டும் பெயிண்ட் செய்யும் செயல்பாட்டில் 38%* நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் தூசி இல்லாத* அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது!
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
62% அதிகம் ஒட்டுப்பண்பு*
ஒப்பீட்டளவில் தூசி இல்லாதது*
38% நேர சேமிப்பு*
சிறப்பம்சங்கள்
 • வழக்கமான புட்டியை விட மேற் பூச்சுக்கு 62% அதிக ஒட்டும் தன்மை
 • வழக்கமான புட்டியை விட 2 மடங்கு அதிக நீர் எதிர்ப்பு
 • அதிக ஆயுள்
 • பூஜ்யம் வி.ஓ.சி-கள்
நன்மைகள்:
 • மீண்டும் பெயிண்ட் செய்யும் செயல்பாட்டில் 38% * நேரம் வரை சேமிக்கப்படுகிறது
 • தூசி இல்லாத * மீண்டும் பெயிண்ட் செய்யும் அனுபவத்தை அளிக்கிறது
 • அனைத்து வகையான பெயிண்ட்களையும் பாதுகாக்கிறது
 • ப்ரைமர் தேவையில்லை
உபயோகம்
 • உட்புற சுவர்கள்
 • வெளிப்புற சுவர்கள்

The technology used to manufacture this product is ‘Patent Pending’.

டெக் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ்
Sr. No டெக்னிக்கல் அளவுகள் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ் சோதனை முறை
1 *கவரேஜ் (சதுரமீட்டர் / கிலோ / இரண்டுபூச்சு) [நல்லமென்மையானபரப்பில்] 1.48-1.76 வீடுகளில்
2 கலவைகாத்திருப்பு (மணிநேரங்கள்) 3.0-3.5 வீடுகளில்
3 ஒட்டும்தன்மை @28 நாட்கள்(N/m2) >=1.0 EN 1348
4 நீர்உறிஞ்சும்திறன் (மிலி), 30 நிமிடங்கள் @28 நாட்கள் <=0.80 கார்ஸ்டன்குழாய்
5 இறுக்கவலிமை @28 நாட்கள் (N/m2) 3.5-7.5 EN 1015-11
6 பருமஅடர்த்தி(g/cm3) 0.85-1.05 வீடுகளில்
*இந்தமதிப்புகள்அனைத்தும்சீரானபரப்பிற்குமட்டுமே; இதுதளத்தின்அமைப்பினைபொறுத்துமாறுபடலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All
சுவர்கள் புதிதாகப் பெயிண்ட் செய்யப்படும்போது அது புதிய பெயிண்ட் எனப்படும், அதேசமயம் சிறிது காலம் கழித்து மீண்டும் பெயிண்ட் செய்யப்படும் போது மீண்டும் பெயிண்ட் செய்தல் எனப்படும். வழக்கமாக, மக்கள் 3-4 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பெயிண்ட் செய்வார்கள். பெரும்பாலும், மீண்டும் பெயிண்ட் செய்வதற்கான காரணம் மங்கலான பெயிண்ட், புடைப்புகள், உதிர்தல் மற்றும் பல ஆகும்.
மீண்டும் பெயிண்ட் செய்யும் செயல்முறையானது, சில காலங்களுக்கு முன்பு, பொதுவாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு பெயிண்ட் செய்யப்பட்ட சுவர்களில் புட்டி பூச்சுகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. புதிதாகப் பெயிண்ட் செய்தலை விட இந்தச் செயல்முறை குறைவான விரிவானது, ஏனெனில் அடித்தளத்தை மீண்டும் தயார்படுத்த வேண்டியதில்லை. வழக்கமாக, சுவரில் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், சுவரில் புதிதாகப் பெயிண்ட் செய்யப்படுவதற்கு முன்பு சரி செய்யப்படும்.
பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டி என்பது வெள்ளை சிமென்ட் அடிப்படையிலான, பிரீமியம் தரமான புட்டி ஆகும். அதன் இழுவிசை வலிமையும், அடி மூலக்கூறுடன் சிறந்த பிணைப்பும் சரியான மேற்பரப்பு தயாரிப்பிற்குப் பிறகு பழைய, அரிக்கப்பட்ட, வர்ணம் பூசப்பட்ட சுவர்களில் நேரடியாகப் பயன்படுத்த உதவுகிறது. மேலும், இது மிகவும் வெண்மையானது, நீர் எதிர்ப்புத்தன்மை கொண்டது, மற்றும் ப்ரைமர் பூச்சுகள் தேவையில்லை. பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியானது மீண்டும் பெயிண்ட் செய்யும் செயல்பாட்டில் 38%* நேரத்தை மிச்சப்படுத்துகிறது மற்றும் இது தூசி இல்லாதது*
வழக்கமான புட்டியுடன் வேலை செய்யும் போது, ​​நீங்கள் புட்டி பூச்சுக்கு முன்பும், புட்டி பூச்சுக்குப் பின்னரும் ஒரு ப்ரைமர் பூச்சைப் பூச வேண்டும். பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டி மூலம், நீங்கள் இந்த நடவடிக்கையை முழுவதுமாகத் தவிர்க்கலாம், இது நேரத்தையும் ஒட்டுமொத்தச் செலவையும் மிச்சப்படுத்துவதில் மிகவும் திறமையாகச் செயல்படுகிறது.

வரிசை எண் பாரம்பரிய பெயிண்ட் செய்தல் செயல்முறை பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டி செயல்முறை
1 பழைய பெயிண்ட்டை உரசித்தேய்க்கவும் தளர்வான துகள்களை அகற்றவும்
2 தளர்வான துகள்களை அகற்றவும் சுவரை முன்கூட்டியே ஈரமாக்கவும்
3 ப்ரைமரின் ஒரு பூச்சைப் பூசவும் பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியின் 1 வது பூச்சை முழுச் சுவரிலும் பூசவும்
4 தேவைப்படும் இடங்களில் சாதாரண புட்டியால் பேட் வேலை செய்யவும் புட்டி பிளேடால் கீறலை அகற்றவும்
5 பேட்ச் வேலையைச் சமன் செய்யச் சுவரைச் சாண்ட் செய்யவும் பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியின் இரண்டாவது பூச்சைப் பூசவும்
6 சாதாரண புட்டியின் 2 வது பூச்சைப் பூசவும் பெயிண்ட்
7 சுவரை மீண்டும் சாண்ட் செய்யவும்  
8 ப்ரைமரின் இரண்டாவது பூச்சைப் பூசவும்  
9 பெயிண்ட்  
பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டி அக்ரிலிக் புட்டியை விட அதிக ஒட்டும் தன்மை மற்றும் இழுவிசை வலிமையைக் கொண்டுள்ளது, இது ஒரு கண்ணாடி ஃபினிஷை வழங்க உதவுகிறது.
பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியைப் பயன்படுத்துவதற்கு முன் ஈரமாக்குவது முக்கியம், ஏனெனில் இது சிறந்த வேலைத்திறனையும், அடி மூலக்கூறு மேற்பரப்புடன் அதிகப் பிணைப்பையும் வழங்குகிறது.
கலவை விகிதம் புட்டி தூளுக்கு 45% சுத்தமான நீர். எனவே, பொதுவாக, உங்களுக்கு 1 கிலோ பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியுடன் 450 மில்லி லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
இந்த தயாரிப்புக்கான கலவையானது 3-5 நிமிடங்களுக்கு ஒரு இயந்திரக் கலக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக, நீங்கள் அதை 10-15 நிமிடங்களுக்குக் கைமுறையாகக் கலக்கலாம். இறுதி தயாரிப்பு ஒரு கிரீம் போன்ற பதத்தில் இருக்க வேண்டும். சிறந்த முடிவுகளுக்கு, முழுமையாகக் கலக்கப்பட்டதற்குப் பின்னர் 5 நிமிடங்களுக்கு நீர்மக்குழம்பை விட்டுவிடுவது நல்லது. கலக்கப்பட்ட 3-3.5 மணி நேரத்திற்குள் நீர்மக்குழம்புப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும், ஏனெனில் அதன் பிறகு அது கடினமாகத் தொடங்கும்.
 • இந்த தயாரிப்பைப் பூசுவதற்கு ஒரு புட்டி பிளேட்டின் பயன்பாடு தேவைப்படுகிறது. பயன்பாட்டிற்கு முன் நீர்மக்குழம்பை நன்றாகக் கலக்குவது முக்கியம். பயன்பாட்டின் போது அடி மூலக்கூறு வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேடிற்கு மேல் இல்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
 • முதல் பூச்சைப் பூசிய பிறகு குறைந்தது 3 மணி நேரம் உங்கள் சுவரை உலர அனுமதிக்கவும். அது உலர்ந்ததும், சுவரில் உள்ள தளர்வான துகள்களை அகற்றவும். இதற்காக, நீங்கள் ஈரமான ஸ்பாஞ் அல்லது புட்டி பிளேடுடன் மேற்பரப்பை மெதுவாகத் தேய்க்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
 • முதல் பூச்சு முற்றிலும் உலர்ந்து தளர்வான துகள்கள் இல்லாத பிறகு, இரண்டாவது பூச்சைப் பூசி முழு நடைமுறையையும் மீண்டும் செய்யவும். இரண்டு பூச்சுகளின் மொத்தத் தடிமன் அதிகபட்சமாக 0.0015 மீட்டர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • இதற்குப் பின்னர், பெயிண்ட்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு சுமார் 10-12 மணி நேரம் உலர விடவும்.
 • எந்தவொரு பெயிண்ட்டையும் பயன்படுத்துவதற்கு முன்பு சீரற்ற தன்மையை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு கண்ணாடி வெள்ளை மேற்பரப்பு ஃபினிஷைப் பெற 500 எண்ணிக்கையில் குறையாத மிகச் சிறந்த நீர்புகா எமரி தாளுடன் மேற்பரப்பை மெதுவாகச் சமன் செய்யுங்கள்.
பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியைப் பயன்படுத்தும்போது, ​​சுவரின் மேற்பரப்பு முன்கூட்டியே ஈரமாக இருப்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். பதம் கிரீம் போன்று மற்றும் குறிப்பிடப்பட்ட விகிதத்திற்கு ஏற்ப இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 3-3.5 மணிநேரக் காலத்திற்குள் பயன்படுத்தப்பட வேண்டிய அளவைத் தயாரிப்பது முக்கியம், ஏனெனில் நீர்மக்குழம்பு அதன் பிறகு கடினமாகத் தொடங்கும். புட்டியை விழுங்கிவிட்டால் அல்லது எந்த வகையிலும் உட்கொண்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை பெறவும். இறுதியாக, இந்தத் தயாரிப்பானது குளிர்ந்த, உலர்வான இடத்தில் சேமிக்கப்பட வேண்டும், மேலும் குழந்தைகளுக்கு இது கிடைக்காமல் இருக்க வேண்டும்.
ஆம், பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியானது கிரீன்ப்ரோ தரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது, மேலும் கிரீன்ப்ரோ சான்றிதழ் பெறவும் தகுதி பெறுகிறது.
தற்போது ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான விருப்பத் தேர்வு இல்லை. மேலும், நாங்கள் இப்போது எந்தவொரு தயாரிப்புகளையும் நேரடியாக வழங்குவதில்லை. அவை எங்கள் ஸ்டாக்கிஸ்ட் நெட்வொர்க் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், பிர்லா ஒயிட் ரீ-பெயிண்ட் புட்டியின் பயன்பாட்டிற்குப் பயிற்சி பெற்ற ஒப்பந்தக்காரர் தேவை. எனவே, எங்கள் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்/ஸ்டாக்கிஸ்டிடமிருந்து தயாரிப்பை வாங்கப் பரிந்துரைக்கிறோம், அவர்கள் ஒரு பயிற்சி பெற்ற திறமையான ஒப்பந்தக்காரருடன் தொடர்பு கொள்ளவும் உதவுவார்கள். இந்தியாமார்ட்டில் எங்கள் தயாரிப்பு பட்டியலை நீங்கள் பார்க்கலாம்.
பிர்லா ஒயிட், சி.ஏ.எஸ்.சி ஆதரவுக்காக (வாடிக்கையாளர் பயன்பாட்டு ஆதரவு செல்) இந்தியா முழுவதும் பயிற்சி பெற்ற மற்றும் ஈடுபாடான கட்டிடப் பொறியாளர்கள் குழுவைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டிடப் பொறியாளர்கள் ஆன்-சைட் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆன்-சைட் சாம்ப்லிங்கை வழங்குகிறார்கள். மேற்பரப்பு ஃபினிஷ் செய்யும் அப்ளிகேட்டர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் நவீனக் கருவிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள், அவை நிபுணத்துவத்தை உருவாக்க மற்றும் நிபுணத்துவம் மிகுந்த பிர்லா ஒயிட் அப்ளிகேட்டர்களாக மாற அவர்களுக்கு உதவுகின்றன.
கிடைக்கும் பேக் அளவுகள்